Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, May 31, 2015

100 சிறந்த புத்தகங்கள் -Writer S.Ramakrishnan


விஜய் டிவி நிகழ்ச்சியில்
நான்  குறிப்பிட்ட சிறந்த 100 புத்தகங்களின் பட்டியல் பற்றி பலரும்
மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டிருக்கிறார்கள், அவர்களின் விருப்பத்திற்காக
மீண்டும் இதைப் பதிவிடுகிறேன்இந்தப்பட்டியல் முற்றிலும் எனது ரசனை
சார்ந்தது, அதிலும் முதன்மையாகப் படைப்பிலக்கியம் சார்ந்தது. இவையின்றி
பல முக்கியமான புத்தகங்கள் உள்ளன என்பதை நான் அறிவேன்,இது தரவரிசையில்லை.
புதிய வாசகன் கற்றுத் தேர வேண்டியது என நான் கருதும்  ஒரு பட்டியலாக
எடுத்துக் கொள்ளவும்இவை முழுமையாக எங்கே கிடைக்கும் என பலமுறை வாசகர்கள்
கேட்டிருக்கிறார்கள் .சென்னை நியூபுக்லேண்ட்ஸ் வடக்கு உஸ்மான் சாலை தி
நகர்கடையிலும் கோவை ராஜவீதியில் உள்ள விஜயா பதிப்பகத்திலும்
கிடைக்க்கூடும்••

1) திருஅருட்பா  – மூலமும் உரையும்
2) மகாபாரதம் –கும்பகோணம் ராமானுஜ ஆச்சாரியார் பதிப்பு. 16 தொகுதிகள்
3) தேவாரம் –
திருவாவடுதுறை ஆதினப்பதிப்பு
4) நாலாயிர திவ்ய பிரபந்தம்  மூலமும்
உரையும்
5) கம்பராமாயணம்–   மர்ரே ராஜம் பதிப்பு
6) திருக்குறள்  – மூலமும்
உரையும்
7) அபிதாம சிந்தாமணி – சிங்காரவேலு முதலியார்
8)சிலப்பதிகாரம்  –
உ.வே.சாமிநாதய்யர் நூலகம் வெளியிடு
9) மணிமேகலை  – மூலமும் உரையும்
10)சங்க இலக்கியங்கள் – நியூ செஞ்சரி புத்தகவெளியீடு 14 தொகுதிகள்
11)யாழ்நூல் – விபுலானந்த அடிகள்
12) தமிழக வரலாறு  – தமிழக அரசு வெளியீடு 2
தொகுதிகள்
13)பாரதியார் – கவிதைகள் கட்டுரைகள்  முழுதொகுப்பு
14)பாரதிதாசன்
கவிதைகள்
.15)ஆனந்த ரங்கம்பிள்ளை நாட்குறிப்பு  – 12 தொகுதிகள்
16)பெரியார்
சிந்தனைகள் –  ஆனைமுத்து தொகுத்தவை.
17)திருப்பாவை  – மூலமும்
உரையும்
18)திருக்குற்றாலகுறவஞ்சி – மூலமும் உரையும்
19)சித்தர் பாடல்கள்–
மூலமும் உரையும்
20)தனிப்பாடல் திரட்டு.
21)பௌத்தமும் தமிழும்–   மயிலை
சீனி வெங்கடசாமி
22) புதுமைப்பித்தன் சிறுகதைகள்
முழுதொகுப்பு
23)கு.அழகர்சாமி சிறுகதைகள்  முழுதொகுப்பு
24)மௌனி
கதைகள்
25)சுந்தர ராமசாமி சிறுகதைகள்  முழுதொகுப்பு
26)ஜெயகாந்தன்
சிறுகதைகள்  முழுதொகுப்பு
27) கி.ராஜநாராயணன் சிறுகதைகள்  முழுதொகுப்பு
28)வண்ணநிலவன் சிறுகதைகள்  முழுதொகுப்பு
29)வண்ணதாசன் சிறுகதைகள்
முழுதொகுப்பு
30)பிரபஞ்சன் சிறுகதைகள்  முழுதொகுப்பு
31)அசோகமித்ரன்
சிறுகதைகள்  முழுதொகுப்பு
32)ஆதவன் சிறுகதைகள்
முழுதொகுப்பு
33)லா.ச.ராமமிருதம் சிறுகதைகள்
முழுதொகுப்பு
34)தி.ஜானகிராமன் சிறுகதைகள்  முழுதொகுப்பு
35)ஆ.மாதவன்
சிறுகதைகள்  முழுதொகுதி
36)விடியுமா  குப.ராஜகோபாலன்
சிறுகதைகள்
37)ராஜேந்திரசோழன் சிறுகதைகள்
38)நீர்மை  ந.முத்துசாமி
சிறுகதைகள்
39)சிறகுகள் முறியும்  அம்பை சிறுகதைகள்
40)பாவண்ணன் சிறுகதைகள்
 முழுதொகுப்பு
41)சுஜாதா சிறுகதைகள்  முழுதொகுப்பு
42)பிச்சமூர்த்தி
சிறுகதைகள்  இரண்டு தொகுதிகள்
43)முத்துலிங்கம் சிறுகதைகள்
முழுதொகுப்பு
44)கந்தர்வன் சிறுகதைகள்  முழுதொகுப்பு
45)சுயம்புலிங்கம்
சிறுகதைகள்46)மதினிமார்கள் கதை  – கோணங்கி47)வெயிலோடு போயி –
தமிழ்செல்வன்48)இரவுகள் உடையும்  பா.செயப்பிரகாசம்49)கடவு – திலீப்குமார்
சிறுகதைகள்50)நாஞ்சில்நாடன் சிறுகதைகள்  முழுதொகுப்பு51)புயலிலே ஒரு தோணி
– ப.சிங்காரம்52)புளியமரத்தின் கதை  சுந்தர ராமசாமி53)கரைந்த நிழல்கள்  –
அசோகமித்ரன்54)மோகமுள் – தி.ஜானகிராமன்55)பிறகு – .பூமணி56)நாய்கள்
நகுலன்57)நித்யகன்னி – எம்.வி.வெங்கட்ராம்58)இடைவெளி – சம்பத்59)ஒரு
மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்  – ஜெயகாந்தன்60)வாசவேஸ்வரம் –
கிருத்திகா61)பசித்த மானுடம்  கரிச்சான்குஞ்சு62)கோபல்லகிராமம் –
கி.ராஜநாராயணன்63)தலைமுறைகள் – நீல பத்மநாபன்64)பொன்னியின் செல்வன்–
கல்கி65)கடல்புரத்தில்  – வண்ணநிலவன்66)நாளை மற்றும் ஒரு நாளே –
ஜீ.நாகராஜன்67)சாயாவனம்  சா.கந்தசாமி68)கிருஷ்ணபருந்து  –
ஆ.மாதவன்69)காகித மலர்கள்  ஆதவன்70)புத்தம்வீடு. – ஹெப்சிபா
யேசுநாதன்71)வாடிவாசல் -சி.சு.செல்லப்பா72)விஷ்ணுபுரம் –
ஜெயமோகன்73)உபபாண்டவம்  – எஸ்.ராமகிருஷ்ணன்74)கூகை  –
சோ.தர்மன்75)ஆழிசூழ்உலகு–   ஜோசப் டி குரூஸ்76)ம்  –
ஷோபாசக்தி77)கூளமாதாரி  – பெருமாள் முருகன்78)சமகால உலகக் கவிதைகள்  –
தொகுப்பு பிரம்மராஜன்79)ஆத்மநாம் கவிதைகள்  முழுதொகுப்பு80)பிரமிள்
கவிதைகள்  முழுதொகுப்பு81)கலாப்ரியா கவிதைகள்  முழுதொகுப்பு82)கல்யாண்ஜி
கவிதைகள்83)விக்ரமாதித்யன் கவிதைகள் முழுதொகுப்பு84)நகுலன் கவிதைகள்
முழுதொகுப்பு85)ஞானகூத்தன் கவிதைகள்  முழுதொகுப்பு86)தேவதச்சன் கவிதைகள்
முழுதொகுப்பு87)தேவதேவன் கவிதைகள்  முழுதொகுப்பு88)ஆனந்த் கவிதைகள்
முழுதொகுப்பு89)பழமலய் கவிதைகள் முழுதொகுப்பு90)சமயவேல் கவிதைகள்
முழுதொகுப்பு91)கோடைகால குறிப்புகள்  சுகுமாரன்92)என்படுக்கையறையில் யாரோ
ஒளிந்திருக்கிறார்கள் –  மனுஷ்யபுத்திரன்93) நீ இப்பொழுது இறங்கும் ஆறு
-சேரன் கவிதைகள்94) ரத்த உறவு– . யூமா வாசுகி95)மரணத்துள் வாழ்வோம்  –
கவிதை தொகுப்பு96)சொல்லாத சேதிகள்  கவிதை தொகுப்பு-
மௌ.சித்ரலேகா.97)தமிழக நாட்டுப்புறக் கதைகள்  தொகுப்பு.–
கி.ராஜநாராயணன்98)தமிழக நாட்டுபுறபாடலகள் –  நா.வானமாமலை99)பண்பாட்டு
அசைவுகள்–   தொ.பரமசிவம் கட்டுரைகள்100)கண்மணி கமலாவிற்கு –
புதுமைபித்தன் கடிதங்கள