Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, November 15, 2018

பல்கலை தேர்வுகள் ஒத்தி வைப்பு

வேலுார்: 'கஜா' புயலால், திருவள்ளுவர் பல்கலை தேர்வுகள் ஒத்தி 
வைக்கப்பட்டுள்ளன.இது குறித்து, வேலுார் திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர், முருகன் வெளியிட்ட அறிக்கை:வேலுார் திருவள்ளுவர் பல்கலை கட்டுப்பாட்டில், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் ஆகிய மாவட்டங்களில், 130 அரசு, தனியார் கலைக் கல்லுாரிகள் உள்ளன.இந்தாண்டு பருவத் தேர்வுகள், இன்று நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தன.கஜா புயலால், கடலுார் மாவட்டத்தில், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே, இன்று நடக்கவிருந்த பல்கலை பருவத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. டிச., 15ல், நான்கு மாவட்டங்களிலும், பருவத் தேர்வுகள் நடக்கும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேபோல திருச்சிபாரதிதாசன் பல்கலை தேர்வுகளும் ஒத்திவைக்கப் பட்டுள்ளன.