Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, November 15, 2018

குரூப் - 2' தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு

சென்னை: 'குரூப் - 2' தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உத்தேச விடை குறித்த கருத்துகளை, 20ம் தேதிக்குள் பதிவு செய்யலாம்.அரசு துறையில், குரூப் - 2 
பதவியில் காலியாக உள்ள, 1,199 இடங்களை நிரப்ப, நவ., 11ல், டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டி தேர்வு நடந்தது. இதில், 4.65 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான உத்தேச விடை குறிப்பு, நேற்று வெளியிடப்பட்டது.பொது தமிழ், ஆங்கிலம், பொது படிப்பு ஆகிய மூன்று தாள்களுக்கு, தமிழ் மற்றும் ஆங்கில வழி விடை குறிப்புகள், டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் நேற்று, வெளியிடப்பட்டன. இந்த விடை குறிப்பில் தவறுகள், பிழைகள் இருந்தால், உரிய ஆதாரத்துடன் தேர்வர்கள் கருத்து கூறலாம்.இதுவரை, தபால் மற்றும் இ-மெயிலில் கருத்துகள் பெறும் முறை இருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, நேற்று முதல், ஆன்லைன் பதிவு முறை அமலுக்கு வந்துள்ளது. தேர்வர்கள், http://www.tnpsc.tech என்ற இணையதளத்தில், தங்கள் கருத்துகளையும், உரிய ஆதாரங்களையும் பதிவு செய்யலாம் என, டி.என்.பி.எஸ்.சி.,யின் செயலர், நந்தகுமார் தெரிவித்துள்ளார்.