கரூர்: கரூர் மாவட்டத்தில் வரும், 21ல், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கலெக்டர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: மிலாடி நபியையொட்டி வரும், 21ல், அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களில், மதுபானம் மற்றும் பீர் வகைகள் விற்பனை முடக்கம் செய்யப்படுகிறது. விதிமுறைகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது, தமிழ்நாடு அரசு மதுபான சில்லரை விற்பனை விதிகளின்படி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.