Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, January 25, 2017

பினாகா ராக்கெட் சோதனை வெற்றி

 தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளை குறிபார்த்து தாக்குவதற்காக பினாகா ராக்கெட் 1 தயாரிக்கப்பட்டது. தற்போது அதனை காட்டிலும் மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் மார்க் 2 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பினாகா ராக்கெட் மார்க் 2வின் முதல் கட்ட சோதனை கடந்த 12ம் தேதி வெற்றிகரமாக நடந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக நேற்று ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஐடிஆர் ஏவுதளத்தில் ேசாதித்து பார்க்கப்பட்டது. நேற்று மதியம் சுமார் 12.45 மணி அளவில் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.