நாம் அனைவரும் நம்மை சுற்றியுள்ள வானிலையைப் பற்றி அறிய செய்திகளை நாடுகிறோம். ஒரு இடத்தில் இருந்தபடி வானிலை நிகழ்வுகளை அறிவதற்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அவை வெப்பத்தின் அளவினை அளக்கவும் , மழை பெய்யும் எனில் அதன் அளவினைக் காட்டவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் நாமும் ஒரு வானிலை ஆராய்ச்சியாளரைப் போல் வானிலைப் பற்றிய செய்திகளை அறியமுடியும். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஷாகுல் இதற்கென பிரத்யேக ஆப் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதனை பயன்படுத்தி இந்தியாவின் பல்வேறு வானிலை மாற்றங்களை நம்மால் அறிய முடியும்.
அந்த ஆப் நம் நாட்டின் சேட்டிலைட் படங்களுடனும், அதன்பற்றிய தகவல்களுளையும் உள்ளடிக்கியது. மேலும் இவை நமது நாட்டின் வெப்ப நிலை, காற்றின் திசை போன்றவற்றையும் குறிக்கிறது. இதன் புகைப்படங்கள் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான CIMSS இடமிருந்து பெறப்பட்டது. இதில் காண்பிக்கப்படும் புகைப்படங்களை கொண்டே நாம் நமது வானிலை மாற்றங்களை அறிந்திட முடியும். குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே இவை அப்டேட் ஆகின்றன. 10 நாட்கள் பின்னர் நடக்கவிருக்கும் வானிலை மாற்றம் வரை இதனைக்கொண்டு அறிய முடியும்.