வர்தா புயல் இன்றூ சென்னை அருகே கரையை கடக்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர வட்டங்களில் செயல்படும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களிலும் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
கடலுார் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கவிருந்த பள்ளி அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.