Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Monday, December 12, 2016

2017ல் ஊதிய உயர்வு எப்­படி இருக்கும்?

இந்­திய ஊழி­யர்கள், 2017ல், 10 சத­வீத ஊதிய உயர்வை எதிர்­பார்க்­கலாம் என, சர்­வ­தேச ஆய்வு அறிக்கை தெரி­விக்­கி­றது. கோர்ன் பெரி ஹே குழுமம், 2017க்கான ஊதிய கணிப்பு அறிக்­கையை வெளி­யிட்டு உள்­ளது. இதில், இந்­தி­யாவில் உள்ள ஊழி­யர்கள், 10 சத­வீத ஊதிய உயர்வை எதிர்­பார்க்­கலாம் என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. இந்த ஆண்டு, இது, 10.3 சத­வீ­த­மாக இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. 
மேலும், பண­வீக்­கத்தை கருத்தில் கொண்டு பார்த்தால், ஊதிய உயர்வின் பலன், 4.8 சத­வீ­த­மாக மட்­டுமே இருக்கும் என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. எனினும், உலக நாடு­க­ளுடன் ஒப்­பிட்டால், இந்­தி­யாவில், ஊதிய உயர்­வுக்­கான வாய்ப்­புகள் ஓர­ளவு அதி­க­மா­கவே இருக்­கி­றது என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. அடுத்த சில ஆண்­டு­களில், இது உல­க­ளவில், 9.5 முதல், 10.5 சத­வீ­த­மாக இருக்க வாய்ப்­புள்­ள­தாக, அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்டு உள்­ளது. 
உயர் பத­வியில் உள்­ள­வர்­களை விட, அறி­முக நிலை­யி­லான பணி­களில் ஊதிய உயர்வு அதி­க­மாக இருக்கும் என்றும் தெரிய வந்­துள்­ளது. உலகம் முழு­வதும் உள்ள, 110 நாடு­களில் அமைந்­துள்ள, 25 ஆயிரம் நிறு­வ­னங்கள் மத்­தியில் நடத்­தப்­பட்ட ஆய்வை மைய­மாக கொண்டு, இந்த அறிக்கை வெளி­யாகி உள்­ளது.