Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, November 10, 2016

டி.என்.பி.எஸ்.சி., குரூப் I தேர்வு அறிவிப்பு!!

துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர், மாவட்டப் பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் மாவட்ட அலுவலர் போன்ற பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குரூப் I தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
2015-2016ம் ஆண்டிற்கான குரூப் I முதல் நிலை எழுத்து தேர்வு பிப்.,19, 2017ம் தேதி அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை மாவட்டங்களில் அமைக்கப்படும், 32 மையங்களில் நடைபெறும்.
இந்தத் தேர்வில் பங்கேற்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளம் மூலம் இன்று முதல் (நவ.,9) டிசம்பர் 8ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தகுதி
குறைந்தபட்சம் 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து வகையினரும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மூன்று நிலை தேர்வு
முதல் நிலை தேர்வு (Preliminary Exam) &'அப்ஜெக்டிவ்&' அடிப்படையில், 300 மதிப்பெண்களுக்கு பொது அறிவு (150 வினாக்கள்) மற்றும் பகுப்பாய்வு திறன் (50 வினாக்கள்) போன்ற பகுதிகளை கொண்டது.
இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின்தேர்வுக்கு (Main Examination) தகுதிபெறுவர். இது 900 மதிப்பெண்களுக்கு &'டிஸ்கிரிப்டிவ்&' (Descriptive) அடிப்படையில் நடைபெறும். இந்த இரு தேர்விலும் தேர்ச்சி பெறுபவர்கள் 120 மதிப்பெண்கள் கொண்ட நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெறுவர்.
காலியிட விவரம்:
துணை ஆட்சியர் – 29
துணை காவல் கண்காணிப்பாளர் - 34
உதவி ஆணையர் - 8
மாவட்டப் பதிவாளர் -1
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் – 5
மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்) – 8
மொத்த காலிபணியிடங்கள் – 85.
தேர்வுக் கட்டணம் விவரம்:
பதிவுக் கட்டணம் ரூ.50
முதல்நிலை எழுத்துத் தேர்வு கட்டணம் ரூ.75
முதன்மை எழுத்துத் தேர்வு கட்டணம் ரூ.125. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தேர்வாணைய இணையதளம் www.tnpsc.gov.in/ www.tnpscexams.net / www.tnpscexams.in என்ற இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நாள்: பிப்., 19, 2017
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 8
மேலும் விவரங்களுக்கு:
www.tnpsc.gov.in