Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, November 10, 2016

விடைத்தாள் திருத்துவதில் தவறு செய்யும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது !!

விடைத்தாள் திருத்துவதில் தவறு செய்யும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது மும்பை பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
மும்பை,
விடைத்தாள் திருத்துவதில் தவறு செய்யும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என மும்பை பல்கலைக்கழகம் கூறியுள்ளது.மாணவர்கள் பாதிப்பு
மும்பை பல்கலைக்கழகம் இந்தியாவின் சிறந்த கல்வி நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு செமஸ்டர் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் போது, பல முறை பேராசிரியர்கள் தவறு செய்கின்றனர்.விடைத்தாள் திருத்தும்போது ஏற்படும் தவறுகளால் ஆண்டுதோறும் 100–க்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு தவறு செய்யும் பேராசிரியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து சமூகஆர்வலர் விகார் துர்வே என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டு இருந்தார்.நடவடிக்கை எடுக்க முடியாது
அவருக்கு மும்பை பல்கலைக்கழகம் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:–பேராசிரியர்கள் வேண்டுமென்று மாணவர்களை தேர்வில் தோல்வியடைய செய்வதில்லை. யாருடைய விடைத்தாளை திருத்துகிறோம் என்பது கூட அவர்களுக்கு தெரியாது. மேலும் விடைதாள் திருத்தும்போது தவறு செய்யும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, மாநில பல்கலைக்கழக சட்டத்தில் எதுவும் கூறப்படவில்லை. பிரிவு 32 (5)–படி தேர்வறைக்கு பணிக்கு வராதவர்கள் மீது மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும்.இவ்வாறு மும்பை பல்கலைக்கழகம் கூறியுள்ளது