Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, November 13, 2016

புது 2000 ரூபாய் நோட்டில் போலியை கண்டுபிடிப்பது எப்படி?

2000 ரூபாய் தாளின் அம்சங்கள் யாவை???

1.வெளிச்சத்தில் வைத்துப்பார்த்தால் 2000 என்று அச்சு செய்யப்
பட்டிருக்கும்.
2. உள்ளுறைப் படுமமாக 2000 என்று பொறிக்கப் பட்டிருக்கும்.
3. இந்திய மொழியில் தெளிவாக 2000 என்று பொறிக்கப் பட்டிருக்கும்.
4. காந்தியின் புகைப்படம் நடுவில் இருக்கும்.
5. காந்திக்கு இடது புரம் “RBI 2000" என்று நுண்ணிய எழுத்துக்களால் பொறிக்கப் பட்டிருக்கும்.
6. நிறம் மாறும் பாதுகாப்பு இளை (பச்சையில் இருந்து நீலமாக) ரூபாயின் நடுவில் கோர்க்கப்பட்டிருக்கும். அந்த பாதுகாப்பு இளையில் Bharath(hindi) RBI and 2000 என்று நுண்ணிய எழுத்துக்களால் பொறிக்கப் பட்டிருக்கும். நோட்டை மேலும் கீழுமாக அசைக்கும் போது பாதுகாப்பி இளை பச்சையில் இருந்து நீலமாக மாறும்.
7. RBIயின் சத்திய பிரமானமும் RBI ஆளுனரின் கையொப்பமும் இடம் பெற்றிருக்கும்.
8. இந்திய ரூபாயின் குறியீடுடன் சேர்ந்து 2000 என்று பொறிக்கப் பட்டிருக்கும் இதுவும் நிறம் மாறுபவையாக இருக்கும் (பச்சையில் இருந்து நீலமாக).
9. அசோகச் சின்ன குறியீடு, காந்தியின் தனியுருவப்படம் மற்றும் 2000 நீரோட்டக் குறியாக இடம் பெற்றிருக்கும்.
10. நோட்டின் எண் இடப் பக்கதில் இருந்து வலப்பக்கமாக சிறிதாக ஆரம்பித்து பெரிதாகிக் கொண்டே போகும்.
11. அசோகச் சின்னமும், காந்தியின் தனி உருவப்படமும் உருசெதுக்கலாக அமைந்திருக்கும் அதாவது மிகவும் நுண்ணிய எழுத்தாக....
12. செவ்வகத்தில் 2000 என்று அச்சிடப் பட்டிருக்கும்.
13. 7 கோண வடிவு கோடுகள் இடம் பெற்றிருக்கும்.
14. இடது பக்கம் எந்த வருடம்(2016) இந்த நோட்டு அச்சிடப்பட்டது என்ற விபரம் இருக்கும்.
15. தூய்மை இந்தியா குறியீடு அமையப் பெற்றிருக்கும்.
16. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் இடம் பெற்றிருக்கும்.
17. மங்கல்யான் புகைப் படம் பொறிக்கப் பட்டிருக்கும்.