Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, September 25, 2016

தொழில்நுட்பக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தொழில்நுட்பக் கல்வித் துறையின் சார்பில் அடுத்த மாதம் மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பட்டயத் தேர்வுகளில், பழைய மாணவர்களுக்கும் கருணை அடிப்படையில் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில், கடந்த 2009 -ஆம் ஆண்டுக்கு முன் (2008-ஆம் ஆண்டு வரை) 3 ஆண்டுகள் பட்டயப்படிப்பில் சேர்ந்த அனைவரும், 2008-ஆம் ஆண்டுக்கு முன் 4 ஆண்டுகள் பகுதிநேர பட்டயப்படிப்பில் சேர்ந்த அனைவருக்கும் ஞத, சத, தத, தந, இ, ஈ, எ, ஒ மற்றும் ஓ பாடத்திட்டங்களில் தேர்வு நடைபெற இருக்கிறது. தேர்வில் பங்கேற்க விரும்புவோர் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.500 தேர்வுக் கட்டணமாகவும், மதிப்பெண் பட்டியல் கட்டணமாக ரூ.30-ம், பதிவுக் கட்டணமாக ரூ.25-ம் என, வரும் 30 -ஆம் தேதிக்குள் அபராதமின்றி, தாங்கள் பயின்ற கல்லூரி முதல்வர் மூலமாக செலுத்த வேண்டும். ரூ.100 அபராதத்துடன் அக்.10-ஆம் தேதிக்குள்ளும், ரூ.500 அபராதத்துடன் தத்கல் முறையில் அக்.14 -ஆம் தேதிக்குள்ளும் இந்தக் கட்டணங்களை செலுத்தலாம்.

www.tnpgtakarurdt.in