Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, September 17, 2016

பள்ளிக்கூடங்களில் யோகா, சூரிய நமஸ்காரத்தை கட்டாயமாக்கும் மாநகராட்சி தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு!!!

மும்பை மாநகராட்சி கடந்த மாதம் 23-ந் தேதி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இதில் மும்பை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மாணவர்களுக்கு யோகா மற்றும் சூரியநமஸ்காரம் செய்வது கட்டாயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்து.
இந்த தீர்மானத்திற்கு இடைகால தடை விதிக்கவேண்டும் என மசூத் அன்சாரி என்ற சமூக ஆர்வலர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
யோகா மற்றும் சூரியநமஸ்காரத்தை கட்டாயமாக்கவேண்டும் என்ற மாநகராட்சியின் தீர்மானம் ஒரு மிகப்பெரிய மனித உரிமை மீறல். உள்நோக்கம் கொண்ட மோசமான தீர்மானம்.
மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பல்வேறு மதம், சாதி மற்றும் சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் அனைவரும் யோகா பயிலவேண்டும் என்பது சரியானதல்ல. எனவே இந்த தீர்மானத்திற்கு இடைகால தடை விதிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இடைக்கால தடை இல்லை
இந்த மனு தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் மற்றும் நீதிபதி சோனக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:-
சூரிய நமஸ்காரம் என்ற பெயரை வைத்து மத அடிப்படையிலானது எனும் முடிவுக்கு வந்துவிடவேண்டாம். இது ஒரு உடற்பயிற்சி, உடலுக்கு நல்லது, அவ்வளவு தான். எனவே பள்ளிக்கூடங்களில் யோகா மற்றும் சூரியநமஸ்காரம் கட்டாயமாக்கப்படும் தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டியதில்லை.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
மேலும் வழக்கு விசாரணையை நீதிபதிகள் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்