Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, September 24, 2016

பள்ளிகளில் போட்டிகள் நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவு !

பேரிடர் மேலாண்மை தொடர்பாக, பள்ளிகளில் போட்டிகள் நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பேரிடர் மேலாண்மை குறித்து,
அனைத்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; அதற்காக பள்ளிகளில், பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்த வேண்டும். அக்., 17 முதல், 26 வரை, பல்வேறு நிலைகளில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்; இறுதியில், மாநில போட்டிகள் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.