Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, September 22, 2016

புதுச்சேரி: ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு நேரடி சேர்க்கை

புதுச்சேரி, லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் நிகழ் கல்வியாண்டில், பட்டயப் படிப்பில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள இடங்களை நேர்காணல் முறையில் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக புதுச்சேரி பிராந்தியத்தைச் சேர்ந்த கீழ்க்காணும் பாடப்பிரிவுகளை பயின்று தகுதியான மாணவ, மாணவியர் வருகிற 26ஆம் தேதி காலை 10 மணிக்கு நடக்க உள்ள நேர்முக சேர்க்கைக்கு வரவேற்கப்படுகின்றனர்.
மேல்நிலைப் வகுப்பில் கலைப்பிரிவு பாடத்தில் 45 சதவீதம் மதிப்பெண்ணுக்கு மேல் தேர்ச்சி பெற்ற முன்னரே விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எம்பிசி இட ஒதுக்கீட்டில் 2 இடங்களும், மிக பிற்படுத்தப்பட்டோர் இபிசி இட ஒதுக்கீட்டில் ஓர் இடமும், அட்டவணை இனத்தவருக்கு 3 இடங்களுக்கான சேர்க்கையும் நடைபெறவுள்ளது.
தொழிற்பாடப்பிரிவில் பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு பிடி ஓர் இடமும் நிரப்பப்பட உள்ளது. பட்டயப் படிப்பில் சேர ஆர்வமுள்ள மாணவ,மாணவியர் நேர்முக சேர்க்கையில் கலந்து கொள்ளலாம் என கல்வித்துறை இயக்குநர் ல.குமார் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமணி

www.tnpgtakarurdt.in