Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, September 20, 2016

மாற்த்திறனாளிகள், முதியோர், நோயாளிகளுக்கு உதவ ரயில்வே அமைச்சகம் புதிய ஏற்பாடு

ரயில்களில் பயணம் செய்ய விரும்பும் முதியோர், நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ரயில் நிற்கும் நடை மேடை வரை நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இவர்களுக்கு உதவ, முக்கியமான ரயில்வே ஸ்டேஷன்களில், பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன. இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்து, நாட்டின் முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில், 'யாத்ரி மித்ர' என்னும் திட்டத்தை, ரயில்வே அமைச்சகம் விரைவில் துவக்க உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், பயணிகள் சேவை மையத்தில், சக்கர நாற்காலி, பேட்டரி கார் போன்றவற்றுடன், 'யாத்ரி மித்ர' என அழைக்கப்படும், ஊழியர்கள் காத்திருப்பர். தேவைப்படுவோருக்கு, சக்கர நாற்காலி அல்லது பேட்டரி காருடன் சென்று, உதவி செய்வர். இது குறித்து, கடந்த, 12ம் தேதி, அனைத்து ரயில்வே மண்டல தலைமை அலுவலகங்களுக்கும் ரயில்வே அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த வசதியை பெற விரும்புவோர், '139' என்ற எண்ணுக்கு, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும் அல்லது தொடர்பு கொள்ள வேண்டும்.