Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, September 22, 2016

கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் விடுப்பளிக்க வகை செய்யும் மகப்பேறு மசோதா ராஜ்யசபாவில் ஒருமனதாக நிறைவேறியது.e

அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் விடுப்பளிக்க வகை செய்யும் மகப்பேறு மசோதா  ராஜ்யசபாவில் ஒருமனதாக நிறைவேறியது.
தனியார் நிறுவனங்கள் உள்பட அனைத்துத் துறைகளிலும்
பணியாற்றும் பெண்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 3 மாத மகப்பேறு விடுப்பை 6 மாதங்களாக அதிகரிக்க வகை செய்யும் மகப்பேறு ஆதாய சட்டத் திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி,
  • அனைத்துத் துறையில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் மகப்பேறு கால விடுப்பு கிடைக்கும்

  • 50க்கும் மேற்பட்ட ஊழியர் பணியாற்றும் நிறுவனத்தில் குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும்

  • பச்சிளம் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் தாய்மார்களுக்கு 3 மாதம் விடுப்பு கிடைக்கும்
                 மசோதா நிறைவேறியதால் 10.80 லட்சம் பேர் பயன்பெறுவர்.

www.tnpgtakarurdt.in