தனியார் நிறுவனங்களில், புதிதாக சேரும் ஊழியர்களுக்கு, அந்நிறுவனம் செலுத்த வேண்டிய, பி.எப்., என்ற வருங்கால வைப்பு நிதிக்கான, பங்களிப்புத் தொகையை, மத்திய அரசே, மூன்று ஆண்டுகளுக்கு செலுத்தும் திட்டம், அக்டோபரில் துவங்குகிறது,'' என, மத்திய தொழிலாளர் துறை துணை டைரக்டர் ஜெனரல் பிரவீன் ஸ்ரீவஸ்தவா
தெரிவித்தார். பல்வேறு தொழில்களில், புதிய பொருட்களை தயாரிக்கும் கைவினைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள், அவர்கள் பயன்படுத்தும் கருவிகளை வழிபடுவதற்காக, 'விஸ்வகர்மா தினம்' மத்திய அரசால்
கொண்டாடப்படுகிறது. வேலைவாய்ப்பு முகாம்கள்சென்னையில் உள்ள பிராந்திய, பி.எப்., தலைமை அலுவலகத்தில், நேற்று இந்நிகழ்ச்சி நடந்தது. அதை துவக்கி வைத்து, பிரவீன் ஸ்ரீவஸ்தவா பேசியதாவது:
தொழிலாளர்களின் திறன் மேம்பாட்டுக்கு, பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறோம். இதில், வருங்காலத்தில் தொழிலாளர்களாக மாறவுள்ள, இளைஞர்களையும் மனதில் வைத்து, 'ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா' போன்ற திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. அப்போது தான், உலக அளவில் நாம் போட்டியாளர்களாக மாற முடியும்.
மத்திய அரசு, மாவட்டம் தோறும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது; இம்முகாம்களில், பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. மேலும், அதிக அளவிலான புதியவர்களுக்கு, தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, புதிதாக பணியில் சேருவோருக்கான மாதாந்திர பி.எப்., பங்களிப்பை, அந்நிறுவனங்களுக்குப் பதிலாக, தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு, மத்திய அரசே செலுத்தும் திட்டம், அக்டோபர், 1ல் துவங்குகிறது.
இவ்வாறு அவர் பேசினார். பி.எப்., நிறுவனத்தின் பிராந்திய இயக்குனர் சலில் சங்கர் பேசுகையில், ''தொழிலாளர்களுக்கு, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த ஊதிய உயர்வு உள்ளிட்ட, பல்வேறு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், மத்திய, மாநில அதிகாரிகள்
பங்கேற்கின்றனர்,'' என்றார்.
4 புதிய இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள்
இ.எஸ்.ஐ., எனப்படும், தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவன மருத்துவமனைகளின் பிராந்திய இயக்குனர், பி.பி.மணி கூறுகையில், ''தமிழகத்தில், தற்போது தொழில் பகுதிகளில் மட்டும் மருத்துவமனைகள் அமைத்துள்ளோம்; இனி, சிறிய கிராமங்களிலும் அமைக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்திலும்;
துாத்துக்குடி, கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்டங்களிலும், புதிய மருத்துவமனைகள் விரைவில் அமைக்கப்படும்,'' என்றார்.
www.tnpgtakarurdt.in