சென்னையில் நடந்த ஆசிரியர் தின விழாவில், தமிழக அரசு சார்பில் 379 பேருக்கு நல்லாசிரியர் விருதுகளை கல்வி அமைச்சர் வழங்கினார்.
ஆசிரியர் தின விழா
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா ஆசிரியர் தின விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படும் ஆசிரியர் தின விழாவில், சிறப்பாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ‘நல்லாசிரியர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்தாண்டு தமிழக அரசு சார்பில் ஆசிரியர் தின விழா சென்னை சாந்தோமில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு பள்ளி கல்வித்துறை செயலர் த.சபிதா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் கலந்து கொண்டார்.
‘நல்லாசிரியர் விருது’
விழாவில், தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் சிறப்பாக பணிபுரிந்து வரும் 379 பேருக்கு ‘நல்லாசிரியர் விருது’களை அவர் வழங்கினார். அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
முன்னதாக பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற ‘திருக்குறள் நடனம்’ உள்பட ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து சென்னை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாநில ஆசிரியர் நல நிதிக்கு ரூ.4 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ஆர்.அழகுமீனா, அமைச்சர் மாபா பாண்டியராஜனிடம் வழங்கினார்.
பங்கேற்பு
இந்த விழாவில் மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.நட்ராஜ், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் மைதிலி கே.ராஜேந்திரன், அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்ணி, அரசு தேர்வுகள் இயக்கக இயக்குனர் தண்.வசுந்தரா தேவி, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் க.அறிவொளி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன், மாநில வயது வந்தோர் மற்றும் பள்ளிசாரா இயக்கக இயக்குனர் மு.பழனிச்சாமி, மெட்ரிக் பள்ளிகள் இயக்கக இயக்குனர் அ.கருப்பசாமி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
பள்ளி கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வரவேற்றார். தொடக்கக்கல்வி இயக்கக இயக்குனர் ரெ.இளங்கோவன் நன்றி கூறினார்.
www.tnpgtakarurdt.in