Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, September 25, 2016

இந்­தி­யாவில் வலை­தளம் வாயிலான கல்வி சந்தை:ரூ.16,750 கோடி­யாக உயரும்

இந்­தி­யாவில், வலை­தளம் வாயி­லாக, கல்வி பயிற்சி அளிக்கும் சந்­தையின் மதிப்பு, இந்­தாண்டு இறு­திக்குள், 16,750 கோடி ரூபாய் என்ற அள­விற்கு உயரும்’ என, ஆய்­வொன்றில் தெரிய வந்­துள்­ளது.இந்­திய மாண­வர்கள், பள்ளிப் படிப்­புடன், ‘டியூஷன்’ எனப்­படும், துணை வகுப்­பு­க­ளுக்கும் செல்­கின்­றனர். இதற்­காக அவர்கள், கூடு­த­லாக பணத்­தையும், நேரத்­தையும் செல­வ­ழிக்­கின்­றனர். இது, பாடங்­களை முழு­மை­யாக புரிந்து கொண்டு, தேர்வில் சிறப்­பாக மதிப்­பெண்கள் பெற உத­வு­கி­றது. 
தற்­போது, வலை­தளம் மூலம் பல நிறு­வ­னங்கள், இது போன்ற துணை வகுப்­பு­களை நடத்­து­கின்­றன. இதனால், மாண­வர்­க­ளுக்கு விருப்­ப­மான நேரத்தில், எந்த இடத்தில் இருந்தும், இத்­த­கைய கல்வி பயிற்­சியை மேற்­கொள்ளும் வசதி கிடைத்­துள்­ளது. இந்­தி­யாவில், வலை­தளம் வாயி­லான கல்வி பயிற்­சியை, ஏரா­ள­மான நிறு­வ­னங்கள் வழங்கி வரு­கின்­றன.

‘இந்­தாண்­டிற்குள், வலை­தள கல்வி பயிற்சி சந்தை, 250 கோடி டாலர், அதா­வது, 16,750 கோடி ரூபா­யாக உயரும்; இது, அடுத்த மூன்­றாண்­டு­களில், 15 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மாக வளர்ச்சி காணும்’ என, ‘ரெட்சீர் கன்­சல்டிங்’ நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் கூறப்­பட்டு உள்­ளது. அதன் விபரம்:மாண­வர்கள் சுல­ப­மாக புரிந்து கொள்ளும் வகையில், வடி­வ­மைக்­கப்­பட்ட பாடத் திட்­டங்கள்; ஆசி­ரி­யர்கள் போதிக்கும் முறையில் புதுமை; நாட்டின் எந்த மூலையில் இருந்தும் கல்வி கற்கும் வசதி போன்­ற­வற்றால், இந்­தி­யாவில் வலை­தள கல்வி பயிற்சி வர்த்­தகம், வேக­மாக வளர்ச்சி கண்டு வரு­கி­றது. 
நாட்டில், 6 – 12ம் வகுப்பு வரை பயிலும், 2 கோடி மாண­வர்கள், வலை­த­ளத்தில், துணை கல்வி பயிற்சி பெற ஆர்­வ­மாக உள்­ள­தாக மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. இவர்­களில் பெரும்­பாலோர், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நக­ரங்­களை சேர்ந்­த­வர்கள். இம்­மா­ண­வர்கள், தற்­போது பாரம்­ப­ரிய முறையில், ஆசி­ரி­யர்கள் நடத்தும் பயிற்சி வகுப்­பு­க­ளுக்கு செல்கின்றனர். இவர்கள், வலை­தள கல்வி பயிற்சியை விரும்­புவர். இத்­த­கையோர், சிறிய நக­ரங்­களில் தான், அதி­க­ளவில் உள்­ளனர். ஆனால், அந்­ந­க­ரங்­களில் ஆற்றல் குறை­வான இணைய இணைப்­புகள், வலை­தள கல்வி வர்த்­த­கத்­திற்கு தடை­யாக உள்­ளது. அத்­துடன், வலை­தள கல்வி குறித்து, போதிய விழிப்­பு­ணர்வு இல்­லாமல் உள்­ளதும், அக்­கல்வி பயிற்­சிக்கு, மாண­வர்கள் கட்­டணம் செலுத்த தயங்­கு­வதும், பாத­க­மான அம்­சங்­க­ளாக உள்­ளன.
இவற்­றுக்கு தீர்வு காணும்­பட்­சத்தில், வலை­தள கல்வி சந்தை சிறப்­பாக வளர்ச்சி காணும். இலவச கல்வி பயிற்சியை குறிப்­பிட்ட காலத்­திற்கு வழங்­கு­வது, குறை­வான இணைய வேகத்­திலும், பாடங்­களை பதி­வி­றக்கி படிக்கும் வசதி போன்­ற­வற்றை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம், இத்­துறை சார்ந்த நிறு­வ­னங்­களின் வர்த்­தகம் உயரும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

www.tnpgtakarurdt.in