Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, September 16, 2016

10ம் வகுப்பு துணைத்தேர்வு; அறிவியல் செயல்முறை தேர்வு அறிவிப்பு!!

நடைபெறவிருக்கும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வில் அறிவியல் பாடத்திற்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுத அறிவிக்கப்படுகிறார்கள்.
தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்களால் 23.09.2016, 24.09.2016 மற்றும் 26.09.2016 ஆகிய மூன்று தேதிகளில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் கலந்து கொண்டு செய்முறைத் தேர்வெழுதலாம்.
ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதி தோல்வியுற்ற தேர்வர்கள் தற்போது அறிவியல் பாட செய்முறைத் தேர்வை மீள எழுத வேண்டும். இத்தேர்வர்கள் கருத்தியல் தேர்வில் ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்றிருப்பினும் செய்முறைத் தேர்வு எழுதிய பின்பு கட்டாயமாக மீள கருத்தியல் தேர்வெழுத வேண்டும்.
அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி பெற்று ஆனால் செய்முறை தேர்வெழுதாமல் விடுபட்ட தனித்தேர்வர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
நேரடித் தனித்தேர்வர்களை பொறுத்தவரை (Fresh Candidate - first time applied for all subjects) அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதிய பின்னரே, அறிவியல் பாட கருத்தியல் தேர்வு உட்பட ஏனைய பாடங்களில் தேர்வெழுத இயலும் என்பதால், இத்தேர்வர்கள் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்றிருப்பின் அவர்களும் மேற்குறிப்பிட்டுள்ள தேதிகளில் செய்முறைத் தேர்வில் கலந்து கொண்டு தேர்வெழுதிய பின்னர் செப்டம்பர்/அக்டோபர் 2016 தேர்வெழுதலாம்.
எஸ்.எஸ்.எல்.சி மார்ச் 2017 தேர்விற்கு அறிவியல் பாட கருத்தியல் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள தனித்தேர்வர்கள் ஜூன் 2016 அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பெயர்களை பதிவு செய்திருப்பர். அத்தகைய தேர்வர்கள் செப்டம்பர்/அக்டோபர் 2016 செய்முறை தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேலும் செய்முறைத் தேர்வு நடத்தப்படவுள்ள பள்ளிகளின் விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம்.