அன்பார்ந்த பெற்றோர்களே!
உங்களுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.
எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.
பரீட்சையில் தோற்றுப் போகும் மாணவர்களுக்குள்
*ஒரு கலைஞன்* இருப்பான்
அவனுக்கு *கணிதம்* தேவைப்படாது.
அங்கே *ஒரு தொழிலதிபர்* இருப்பான்
அவனுக்கு *வரலாறு இலக்கியம்*முக்கியமில்லை.
*ஒரு இசைஞானி* இருப்பான்
அவனுக்கு *இரசாயனவியல்* அவசியமிறாது.
*ஒரு விளையாட்டு வீரனிருப்பான்*
அவனுக்கு உடல் நலன் மட்டுமே முக்கியமன்றி
*பெளதீகவியல் புள்ளியியல்* முக்கியமில்லை.
பரீட்சையில் அதிக புள்ளி எடுத்தால் *சிறந்த பிள்ளை*.. எடுக்காவிட்டால்.......?
தயவு செய்து அவர்களது தன்நம்பிக்கையைப் பறித்து விடாதீர்கள்.
சொல்லுங்கள் அவர்களுக்கு இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே.
நீ வாழ்கையில் வெற்றி கொள்ளக்கூடிய இதை விட *பெரிய சவால்கள்*் நிறைய உள்ளன.
உன் மீதுள்ள *என் அன்பு* நீ பரீட்சையில் எடுக்கும் மார்க்கை வைத்து தீர்மானிப்பதில்லை.
என்றும் *நீ என் பிள்ளைதான்* *என் உயிர தான்* என்று சொல்லிப் பாருங்கள் பரீட்சையில் மார்க் எடுக்காத உங்கள் பிள்ளை *ஒரு நாள் உலகை வெல்வான்*்.
வெறுமனே ஒரு பரீட்சையின் அதன் மதிப்பெண்கள் , உங்கள் பிள்ளையின் கணவை மற்றும் திறமைகளை அழித்து விடக்கூடாது.
*வைத்தியர்களும் பொருயியலாலர்களும்* மட்டுமே உலகில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் என தயவு செய்து நினைக்காதீர்கள்.
உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் எமது நல்வாழ்த்துக்கள்.