Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, August 27, 2016

புதிய கல்வி கொள்கை பரிந்துரைகள்: எங்கள் அறிக்கையை மத்திய அரசு முழுமையாக வெளியிடவில்லை- கமிட்டி தலைவர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தகவல்


புதிய கல்வி கொள்கை தொடர் பான அறிக்கை முழுமையாக வெளியிடப்படவில்லை, அதன் சாராம்சங்கள் மட்டுமே வெளி யிடப்பட்டுள்ளன என்று அதனை வரையறுத்த கமிட்டியின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தெரி வித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கையை வரையறுக்க மத்திய அமைச் சரவை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டியை மத்திய அரசு அமைத் தது. அந்த கமிட்டி கடந்த மே மாதம் தனது பரிந்துரைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை யிடம் சமர்ப்பித்தது.
அந்த அறிக்கை குறித்து பொதுமக்களும் கல்வியாளர் களும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக டி.எஸ்.ஆர்.சுப்பிர மணியன் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி வருமாறு:
தற்போதைய கல்வி நடைமுறை எப்படி உள்ளது?

தற்போதைய நடைமுறையை பாராட்ட வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்களா? எங்களைப் பொறுத்தவரை முழுமையாக விமர்சித்து அறிக்கை தயார் செய் துள்ளோம். எங்கள் கமிட்டியின் அறிக்கை முழுமையாக வெளி யிடப்படவில்லை. அதன் சாராம் சங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள் ளன. அதற்குக் காரணம் முழுக்க முழுக்க விமர்சனங்களை மக்களிடம் கொண்டு சென்றால் நன்றாக இருக்காது என்பதுதான்.
தற்போதைய கல்வி நடை முறையை பாராட்ட ஒன்றும் இல்லை. எங்கள் அறிக்கையில் நாங்கள் உண்மையை மட்டுமே எடுத்துரைத்துள்ளோம். யாரை யும் குறிப்பிட்டு குற்றம் சாட்ட விரும்பவில்லை. கடந்த 70 ஆண்டு கால தவறான நிர்வாகத்தின் அவலத்தை மட்டுமே தோலுரித்து காட்டியுள்ளோம்.
ஒரு நல்ல கொள்கை உருவாக் கப்படும்போது அதன் பெருமை ஒருவருக்கு மட்டுமே கொடுக்கப் பட வேண்டும் என்று கருதவில்லை. கொரியா எங்கோ சென்றுவிட்டது. சீனா சாதனைகளைப் படைத்து வருகிறது. நாம் எப்போது மாற் றத்தைக் கொண்டு வரப் போகிறோம். இனிமேலும் காலத்தை கடத்த முடியாது.
கடந்த ஆண்டு விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இப்போதும் கலந்துரையாடல்கள் தொடர்கின்றன. இதனால் பயன் உண்டா?
ஆலோசனைகள் செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வரவில்லை. இன்னும் 3 ஆண்டுகள் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தாலும் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. அமைச்சர் ஆர்வமாக உள்ளார். கல்விக் கொள்கை என்பது தனி நபர் சார்ந்ததோ, கட்சி சார்ந்ததோ, தனி சிந்தாந்தம் சார்ந்ததோ இல்லை. இது ஒட்டுமொத்த நாட்டுக்கானது. இதில் மேலோட்டமாக திருத்தங் கள் செய்வது பேரழிவுகளை ஏற்படுத்தும்.
உங்கள் பரிந்துரைகள் முன் னெடுத்துச் செல்லப்படுமா?
எங்களது அறிக்கையில் 95 பரிந்துரைகளை முன்வைத் துள்ளோம். அவை கொள்கை களாக மாற்றப்படலாம், திருத் தங்கள் செய்யப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம்.
உங்கள் குழுவின் அறிக்கையில் எதுவுமே இல்லை என்று முன்னாள் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளாரே?
ராகுல் காந்தியை பாதுகாப் பதற்கே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது. எங்களது அறிக்கையைப் படிக்க அவருக்கு நேரம் கிடையாது. கல்வியின் தரம், அனைவருக்கும் சம உரிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எங்களது அறிக்கையை தயார் செய்துள்ளோம்.
உங்கள் கமிட்டியில் கல்வி யாளர்கள் இடம்பெறவில்லை என்று விமர்சிக்கப்படுகிறதே?
நான் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். ஏழை மாணவர்களுக்கான கல்வித் திட்டத்தை உருவாக்கியுள்ளேன். தலைமைச் செயலாளராக இருந்தபோது வாஷிங்டனில் நடந்த உலக வங்கியின் கல்வித் திட்ட முகாமில் பங்கேற்றுள்ளேன். இம்பீரியல் கல்லூரி, ஹார்வர்டு பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். எனது கமிட்டியில் இடம்பெற்றுள்ள இதர உறுப்பினர்களும் போதுமான கல்வி அனுபவங்களைப் பெற்றுள்ளனர்.www.tnpgtakarurdt.blogspot.in