Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, August 23, 2016

நம்புங்கள்... உலகில் 7வது பணக்கார நாடு இந்தியா

உலகில் 10 பணக்கார நாடுகள்
பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடம்
கிடைத்துள்ளது. இந்தியாவின் சொத்து மதிப்பு
5,600 பில்லியன் அமெரிக்க டாலர் என
கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில்
அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தென்
ஆப்ரிக்காவை சேர்ந்த 'நியூ வேர்ல்ட் வெல்த்'
என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இத்தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமெரிக்கா 48,900 பில்லியன் டாலர்
சொத்துக்களுடன் முதலிடத்திலும், சீனா, 17,400
பில்லியன் டாலர் சொத்துக்களுடன் இரண்டாம்
இடத்திலும், ஜப்பான் 15,155 பில்லியன்
டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இங்கிலாந்து 9,200 பில்லியன் டாலர்களுடன் 4வது
இடத்திலும், ஜெர்மனி 9,100 பில்லியன்
டாலர்களுடன் 5வது இடத்திலும், பிரான்ஸ் 6,600
பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 6வது
இடத்திலும், கனடா 8வது இடத்தில் உள்ளது.
அந்நாட்டின் சொத்து மதிப்பு 4,700 பில்லியன்
அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா 4500 பில்லியன் அமெரிக்க டாலர்
சொத்துக்களுடன் 9வது இடத்திலும், இத்தாலி
4,400 அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் 10வது
இடத்திலும் உள்ளது.
இந்தியாவில் அதிக மக்கள் தொகை காரணமாக
7வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவின்
இடம் ஆச்சர்யமாக உள்ளது. அங்கு 2.4 கோடி
மக்கள் தான் வசிக்கின்றனர். கடந்த 5 வருடங்களில்
சீனா பணக்கார நாடாக அதிவேகமாக வளர்ச்சி
பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவும் இந்தியாவும்
நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா,
இந்தியா, கனடா ஆகிய நாடுகள் இத்தாலியை
கடந்த 12 மாதங்களில் முந்தியுள்ளது என அந்த
ஆய்வில் கூறப்பட்டுள்ளது.