Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, August 25, 2016

பிளஸ் 2வுக்கு செப்டம்பர், 8ல் காலாண்டு தேர்வு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி
வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்' என,
அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி பொதுத்
தேர்வை போல, காலாண்டு, அரையாண்டு
தேர்வுகளை, அனைவருக்கும் பொதுவான
வினாத்தாளுடன் நடத்த, பள்ளிகளுக்கு
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்., 8ல்,
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு,
காலாண்டு தேர்வு துவங்குகிறது.
பிளஸ் 2வுக்கு, செப்., 8 முதல், 12 வரை, மொழி
பாடங்களுக்கும்; மற்ற தேர்வுகள், செப்., 14
முதல், 23 வரையிலும் நடத்தப்பட உள்ளன.
பத்தாம் வகுப்புக்கு, செப்., 8 முதல், 14 வரை
மொழி பாட தேர்வுகளும்; மற்ற தேர்வுகள்,
செப்., 15 முதல், 23 வரையிலும் நடத்தப்படும்
என, அறிவிக்கப்பட்டுள்ளது.