Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, February 07, 2016

‘நெட்’ தேர்வுக்கு எம்எஸ்சி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

சிஎஸ்ஐஆர் அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பில் கூறியிப்பதாவது:கல்லூரிகள் மற்றும்
பல்கலைக் கழகங்களில் கணிதம் மற்றும் அறி வியல்
சம்பந்தப்பட்ட பாடங்களில் உதவி பேராசிரியர் பணியில்
சேருவதற்கு அறிவியல் தொழில் ஆராய்ச்சிக் குழு
(சிஎஸ்ஐஆர்) நடத்தும் நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற
வேண்டும்.அந்த வகையில் இந்த ஆண்டுக் கான
முதலாவது தகுதித்தேர்வு ஜூன் மாதம் 19-ம் தேதி நடை
பெற உள்ளது.
தமிழகத்தில் சென்னையிலும், காரைக்குடியிலும் தேர்வு
நடக்கும். கணிதம், இயற்பி யல், வேதியியல், தாவரவியல்,
விலங்கியல் உள்ளிட்ட பாடங்களில் எம்எஸ்சி பட்டம்
பெற்றவர்கள் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்சம் 55% மதிப்பெண் அவசியம். எஸ்சி, எஸ்டி,
மாற்றுத் திறனாளிகளுக்கு 50% மதிப்பெண் போதுமானது.
எம்எஸ்சி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும்
விண்ணப்பிக்கலாம்.தகுதியுடையவர்கள் பிப்ரவரி 29-ம்
தேதிக்குள் ஆன்லை னில் (www.csirhrdg.res.in) விண்ணப்
பிக்க வேண்டும். ஆன்லைன் விண் ணப்பத்தை பிரின்ட்
அவுட் எடுத்து போட்டோ ஒட்டி, கையெழுத்திட்டு,
தேர்வுக்கட்டணம் மற்றும் தேவை யான இதர
ஆவணங்களுடன் மார்ச் 7-ம் தேதிக்குள் டில்லிக்குஅனுப்ப
வேண்டும்.