இந்தியாவில், இ – காமர்ஸ் எனப்படும், மின்
னணு வணிகத்தில், முன்னணியில் உள்ள, ‘பிளிப்கார்ட்,
ஸ்நாப்டீல், அமேசான் இந்தியா’ ஆகிய மூன்று நிறுவ
னங்களின் நிலை, விசித்திரமாக உள்ளது.
இவை, வலைதளம் மூலம், ஆடை, மொபைல்போன்,
‘டிவி’ என, ஏராளமான பொருட்களை, நேரடியாக வாடிக்
கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றன. இந்த நிறுவ
னங்களின் வர்த்தகம், ஆண்டுக்காண்டு சிறப்பாக வளர்ச்சி
கண்டு வருகிறது. இருந்தபோதிலும், இன்னும் இந்த
நிறுவனங்கள், இழப்பையே சந்தித்து வருகின்றன. இவற்
றுக்கு இடையே, சந்தையில் கடும் போட்டி நிலவி வருகி
றது. இதன் காரணமாக, இந்நிறுவனங்கள், விளம்பரங்க
ளுக்கு, ஏராளமாக பணத்தை வாரி இறைக்கின்றன. அதே
சமயம், குறைந்த விலையிலும் பொருட்களை விற்கின்
றன. ஒரு சில பொருட்களை, அசல் விலைக்கே தருகின்
றன.
இதனால், பயன்பெறும் வாடிக்கையாளர்களை தக்க
வைத்துக் கொள்ள, பல்வேறு சலுகைகளையும் வழங்கு
கின்றன.இதன் மூலம், 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்
புள்ள, இந்திய மின்னணு வர்த்தக சந்தையில், 80 சதவீ
தத்தை, அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் நிறுவனங்கள்
பிடித்துள்ளன. இச்சந்தை, ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து
வருவதால், இந்நிறுவனங்களும் வளர்ச்சி கண்டு வரு
கின்றன.
அமேசான் இந்தியா நிறுவனம், சென்ற, 2014 – 15ம் நிதி
யாண்டில், 1,022 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் புரிந்துள்
ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டை விட, ஆறு
மடங்கு அதிகம். எனினும், இந்நிறுவனம், 1,724 கோடி
ரூபாய் இழப்பை கண்டுள்ளது. அதுபோல, பிளிப்கார்ட்,
2,000 கோடி ரூபாய்; ஸ்நாப்டீல், 1,330 கோடி ரூபாய்
இழப்பை கண்டுள்ளன.
முதலீடு! * இந்திய மின்னணு சந்தை, 2020ல், 6.70 லட்சம்
கோடி ரூபாயாக உயரும்* வலைதள விற்பனையில்,
பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் ஆகியவற்றை தொடர்ந்து,
அமேசான் இந்தியா உள்ளது * அமேசான், இந்தியாவில்,
13,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.