Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, February 07, 2016

தெற்காசியாவில் இந்தியா ‘தங்க மழை’

தெற்காசிய விளையாட்டில் பளுதுாக்குதல்
பிரிவில் இந்தியாவின் குருராஜா, சாய்கோம் சானு தங்கம்
வென்றனர். நீச்சல் பிரிவில் சந்தீப் செஜ்வால், ஷிவானி
சாதனை படைத்தனர்.
அசாமின் கவுகாத்தியில் 12வது தெற்காசிய
விளையாட்டு நடக்கிறது. இதன் சைக்கிள் பெண்கள்
தனிநபர் 30 கி.மீ., பிரிவு பைனலில் அசத்திய
இந்தியாவின் விஜயலட்சுமி பந்தய துாரத்தை 49 நிமிட,
24 வினாடிகளில் அடைந்தார். முதலிடம் பிடித்த இவர்
இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்றார். சக வீராங்கனை
சபோபா தேவி வெள்ளி (49 நிமிடம், 31 வினாடி)
கைப்பற்றினார்.
பளுதுாக்குதலில் அசத்தல்:
பெண்கள் பளுதுாக்குல் 48 கி,கி., பிரிவில் இந்தியாவின்
சாய்கோம் சானு பங்கேற்றார். இதில் 'ஸ்னாட்ச்' (79)+
'கிளீன் அன்ட் ஜெர்க்' (90) என ஒட்டுமொத்தமாக 169
கி.கி., எடை துாக்கினார். முதலிடம் பிடித்து தங்கம்
வென்றார்.
ஆண்கள் 56 கி.கி., பிரிவில் இந்திய வீரர் குருராஜா
'ஸ்னாட்ச்' (104)+ 'கிளீன் அன்ட் ஜெர்க்' (137) என
ஒட்டுமொத்தமாக 241 கி.கி., எடை துாக்கி, தங்கம்
கைப்பற்றினார்.
நீச்சலில் சாதனை:
நீச்சல் 200 மீ., 'பிரஸ்ட்ஸ்டிரோக்' பிரிவில் இந்தியாவின்
சந்தீப் செஜ்வால் 2 நிமிடம் 20.66 வினாடியில் இலக்கை
அடைந்து தங்கம் வென்றார். இதன் மூலம், தெற்காசிய
விளையாட்டில் தனது முந்தைய (2.21.03) சாதனையை
தகர்த்தார்.
பெண்கள் 200 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் இந்தியாவின்
ஷிவானி கட்டாரியா இலக்கை, 2 நிமிடம் 8.68
வினாடியில் அடைந்து, புதிய சாதனையுடன் தங்கம்
வென்றார்.
பெண்கள் 4*100 மீ., 'ரிலே' பிரிவில் இந்திய அணி 4
நிமிடம் 1.95 வினாடியில் பந்தய துாரத்தை அடைந்து
தங்கம் வென்றது. தவிர, கடந்த 2006ல் நடந்த தெற்காசிய
விளையாட்டில் எட்டியிருந்த சாதனையை (4.8.72)
முறியடித்தது.
பெண்கள் 100 மீ., 'பட்டர்பிளை' பிரிவில் இந்தியாவின்
தாமினி கவுடா ஒரு நிமிடம் 4.92 வினாடியில் இலக்கை
அடைந்து தங்கம் கைப்பற்றினார்.
200 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் இந்தியாவின் சவுரவ்
(1.53.03), 100 மீ., 'பட்டர்பிளை' பிரிவில் சுப்ரியா (55.86)
உள்ளிட்டோர் வெள்ளி வென்றனர்.
தீபிகா குமாரி அசத்தல்
வில்வித்தையில் பெண்கள் 'ரிகர்வ்' அரையிறுதியில்
இந்தியாவின் தீபிகா குமாரி 6-0 என வங்கதேசத்தின்
பியூட்டி ரேவை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார்.
இதே பிரிவு பைனலுக்கு சக வீராங்கனை பாம்பய்லா
தேவியும் முன்னேறினர். ஆண்கள் 'ரிகர்வ்' பிரிவில்
இந்தியாவின் தருண்தீப் ராய், குருசரண் பைனலுக்குள்
நுழைந்தனர்.
'காம்பவுண்ட்' ஆண்கள் பிரிவில் இந்தியாவின் அபிஷேக்
வர்மா, ரஜாத் சவுகான் பைனலுக்கு முன்னேறினர்.
பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை புரவ்ஷா, ஜோதி
சுரேகாவும் பைனலுக்குள் நுழைந்தனர்.
இதன் மூலம், இந்த இரண்டு பிரிவுகளில் மட்டும் 4
தங்கம், 4 வெள்ளி பதக்கங்கள் உறுதியானது.
மல்யுத்தம்: 5 தங்கம்
மல்யுத்த பிரிவிலும் இந்திய நட்சத்திரங்கள் தங்கம்
வென்று அசத்தினர். பெண்கள் 'பிரிஸ்டைல்' பிரிவில்
பிரியங்கா சிங் (48 கி.கி.,), அர்ச்சனா தோமர் (55 கி.கி.,),
மனிஷா (60 கி.கி) தங்கம் வென்றனர். ஆண்கள்
'பிரீஸ்டைல்' பிரிவில் இந்தியாவின் ரவிந்தரா (57 கி.கி.,),
ராஜ்னிஸ் (65 கி.கி.,) தங்கம் கைப்பற்றினர்.
ஷில்லாங்கில் துவக்கவிழா
தெற்காசிய விளையாட்டு மற்றொரு துவக்கவிழா நேற்று
ஷில்லாங்கில் (மேகாலயா) நடந்தது. போட்டிகளை
மேகாலயா முதல்வர் முகுல் சங்மா துவக்கிவைத்தார்.
இதில் பங்கேற்கும் நாடுகளை சேர்ந்த விளையாட்டு
நட்சத்திரங்கள் தங்களது நாட்டு கொடியுடன்
அணிவகுத்து வந்தனர். இந்திய அணி சார்பில்
பாட்மின்டன் வீராங்கனை சிந்து மூவர்ணக்கொடியுடன்
வந்தார்.