வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.4 லட்சமாக
உயர்த்த வேண்டும், ‘பான்’ எண் குறிப்பிடுவதை
கட்டாயமாக்கும் பரிவர்த்தனை வரம்பை ரூ.5 லட்சமாக
உயர்த்த வேண்டும் என்று அருண் ஜெட்லியிடம் மத்திய
நிதி அமைச்சக ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள்
யோசனை தெரிவித்தனர்.அருண் ஜெட்லி ஆலோசனை
மத்திய பட்ஜெட், வருகிற 29–ந்தேதி தாக்கல்
செய்யப்படுகிறது. இந்நிலையில், மத்திய நிதி
அமைச்சகத்துடன் இணைந்த ஆலோசனை கமிட்டி கூட்டம்
டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில், மத்திய நிதி
மந்திரி அருண் ஜெட்லியும் கலந்து கொண்டார்.கூட்டத்தில்
பங்கேற்ற உறுப்பினர்கள், வருமான வரி விலக்கு
உச்சவரம்பை தற்போதைய ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.4
லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும், வரி
செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரித்த வேண்டும்
என்றும், வரி ஏய்ப்பு செய்வோருக்கு கடுமையான
தண்டனை அளிக்க வேண்டும் என்றும் யோசனை
தெரிவித்தனர்.பான் எண்
ரூ.2 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட ரொக்க
பரிவர்த்தனைக்கு ‘பான்’ எண்ணை தெரிவிப்பது கட்டாயம்
ஆகியுள்ளது. அதை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்
என்றும் உறுப்பினர்கள் யோசனை தெரிவித்தனர்.வரி
செலுத்துவோரை துன்புறுத்தும்வகையில், அர்த்தமின்றி
அதிக வரி விதிக்கும் மதிப்பீட்டாளருக்கு எதிராக
மேல்முறையீட்டு வாரியத்தில் தீர்ப்பு வந்தால், அந்த
மதிப்பீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும் கூறினர்.வேளாண் உற்பத்தியை பெருக்க
வேண்டும், வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் கூடுதல்
நிதி ஒதுக்க வேண்டும், ஏழைகள் மற்றும் சாமானியருக்கு
ஏற்ற பட்ஜெட்டாக இருக்க வேண்டும் என்றும்
உறுப்பினர்கள் யோசனை தெரிவித்தனர்.வேளாண்
துறைக்கு அதிக நிதி
இந்த கூட்டத்தில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி
பேசியதாவது:–பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி
வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இன்னும் வேகமாக
முன்னேறக் கூடிய திறனையும் கொண்டுள்ளது.
அதனால், நிதி பற்றாக்குறை இலக்கு, இலக்குக்குள்ளேயே
இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.பருவமழை
தவறியதால், கடந்த 2 ஆண்டுகளாக வேளாண் வளர்ச்சி
பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்பு நிதியாண்டில்,
வறட்சி நிவாரணமாக மாநிலங்களுக்கு அதிக நிதி
கொடுக்கப்பட்டுள்ளது. வருகிற பட்ஜெட்டில், வேளாண்
உற்பத்தியை பெருக்க வேளாண் துறைக்கு அதிக நிதி
ஒதுக்கப்படும்.ரூ.1.10 லட்சம் கோடி
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 7–
வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை அமல்படுத்த முடிவு
செய்துள்ளோம். ராணுவத்தினருக்கு ‘ஒரே பதவிக்கு ஒரே
ஓய்வூதியம்’ திட்டத்தையும் அமல்படுத்த
திட்டமிட்டுள்ளோம்.இவற்றை அமல்படுத்துவதற்காக,
வருகிற பட்ஜெட்டில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி
ஒதுக்க வேண்டி உள்ளது. பட்ஜெட் மதிப்பீட்டை விட
உண்மையான செலவு அதிகமாக இருப்பது இதுவே
முதல்முறை ஆகும்.இவ்வாறு அருண் ஜெட்லி பேசினார்.