Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, February 09, 2016

பிளஸ் 2 தேர்வு செய்முறை துவக்கம்

 தமிழகம் முழுவதும், பிளஸ் 2 பொதுத்தேர்வின் முதற்கட்டமாக, செய்முறை தேர்வு துவங்கியது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச், 4ல் பொதுத்தேர்வு துவங்க உள்ளது. இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று செய்முறைத் தேர்வு துவங்கியது. கணிதம், அறிவியல், கணினி அறிவியல், பொறியியல் மற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவு என, 15 பாடப்பிரிவு மாணவர்களுக்கு, செய்முறை தேர்வுகள் நடந்தன. 
எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு செய்முறை தேர்வில், மாணவர்களுக்கு தனித்தனியே வினாக்கள் வழங்கப்பட்டு, செய்முறை தேர்வுகள் நடந்தன. அனைத்து ஆய்வகங்களிலும், தேவையான உபகரணங்கள் மற்றும் ரசாயன பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. வரும், 22ம் தேதி வரை, செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
www.tnpgtakarurdt.blogspot.in