சென்னை,
தமிழகத்தில்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு, அம்மா சிறு வணிகக்
கடன் உதவி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா
இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை,
திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு வட்டியில்லாக் கடன்
வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 14-ந் தேதி
அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்றுமுதல்
(வெள்ளிக்கிழமை) சிறுவணிகர்களுக்கு கடன் வழங்கப்பட உள்ளது. கடன் வழங்கும்
திட்டத்துக்கு அம்மா சிறு வணிகக் கடன் உதவி திட்டம் என்று பெயர்
சூட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்- அமைச் சர் ஜெயலலிதா சென்னை தலைமை
செயலகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார்.
சிறப்பு அம்சங்கள்
அம்மா சிறு வணிகக் கடன் உதவி திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:-
* மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.5 ஆயிரம் வரை வட்டியில்லாக் கடன் உதவி வழங்கப்படும்.
* சிறு வணிகர்களுக்கு உதவிடும் வகையில் 11 சதவீதம் வட்டியை தமிழக அரசே ஏற்கும்.
*
பூக்கள், பழங்கள், காய்கறிகள், உணவு பொருள் போன்றவற்றை விற்கும் தெருவோர
சிறு வணிகர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், பெட்டிக்கடை நடத்துவோர் பயன்
பெறலாம்.
* எளிய தவணையில் வாரம் ரூ.200 வீதம் 25 வாரங்களில் கடனை திருப்பி செலுத்தலாம்.
500 சிறப்பு முகாம்கள்
* குறித்த காலத்தில் கடனை திருப்பி செலுத்தும் சிறு வணிகர்கள் 4 சதவீத குறைந்த வட்டியில் மீண்டும் கடன் உதவி பெறும் வசதி உள்ளது.
* எளிதில் கடன் பெறும் வகையில் 22-ந் தேதி (இன்று) முதல் பிப்ரவரி 2-ந் தேதி வரை 500 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.