Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, January 12, 2016

மறுமலர்ச்சி ஏற்படுத்திய மகத்தான மகான்

இந்தியாவில் ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர், சைதன்யர், குருநானக், புத்தர், மகாவீரர் போன்றவர்கள் மகத்தான ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தினர்.

அந்த வரிசையில் 19ம் நுாற்றாண்டில், இந்து மதத்தில் ஒரு மாபெரும் மறுமலர்ச்சியை மகத்தான நல்ல ஒரு தாக்கத்தை -ஏற்படுத்தியவர் சுவாமி விவேகானந்தர். அவரது பிறந்த நாளான இன்று தேசிய இளைஞர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

விவேகானந்தர் 39 ஆண்டுகள் தான் வாழ்ந்தார். ஆனால் 1500 ஆண்டுகளுக்கு மக்களுக்குத் தேவையான செய்தியைக் கொடுத்துச் சென்றிருக்கிறார்.ராமகிருஷ்ணரால் உருவாக்கப்பட்டவர் விவேகானந்தர். இது வரையில் உலக வரலாற்றில் ராமகிருஷ்ணர் போன்று இப்படி ஒரு குரு, விவேகானந்தர் போன்று இப்படி ஒரு சீடர் இருந்ததில்லை. முன்பு, 'சந்நியாசிகள் கடல் கடந்து அந்நிய நாடுகளுக்குச் செல்லக் கூடாது,' என்ற கருத்து நிலவியது. இந்தியாவின் ஆன்மிகத் துாதராகக் கடல் கடந்து சென்ற முதல் இந்து சந்நியாசி சுவாமி விவேகானந்தர்.

www.tnpgtakarurdt.blogspot.in
இந்தியாவின் விஸ்வரூபம் : மகாபாரதப் போர் நடந்த போது கிருஷ்ணர், அர்ஜுனனுக்குத் தன் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டினார். அப்போதுதான் அர்ஜுனனுக்கு கிருஷ்ணரின் நிஜசொரூபம் புரிந்தது.அது போன்று, “இந்தியா ஆன்மிக பூமி, இந்தியா தவ பூமி, இந்தியா ஞானபூமி, இந்தியா புண்ணிய பூமி, இந்தியாவின் முதுகெலும்பு ஆன்மிகம், இந்தியாவின் உயிர்நாடி ஆன்மிகம், இந்தியாவின் அடித்தளம் ஆன்மிகம், இந்தியாவின் இதயம் ஆன்மிகம்” என இந்திய மக்களுக்குத் தெளிவாக உணர்த்தி, இந்தியாவின் விஸ்வரூபம் இந்துமதத்தின் நிஜசொரூபம் ஆன்மிகம் தான் என எடுத்துக்காட்டிய ஆன்மிக தலைவர் விவேகானந்தர்.  

www.tnpgtakarurdt.blogspot.in
  தலைநிமிரச் செய்தவர்: இந்தியா ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த போது, சரிந்து கொண்டிருந்த இந்துமதத்தைத் தாங்கும் இரும்புத்துாணாக விவேகானந்தர் விளங்கினார். இந்து மதத்தின் இறையாண்மையை உலகிற்கு உணர்த்தியவர் விவேகானந்தர். இந்தியாவின் இறையாண்மையை உலகிற்கு உணர்த்தியவர் விவேகானந்தர்.ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இந்தியர்கள் தங்களைப் பற்றி தாழ்வான எண்ணம் கொண்டிருந்தனர்;

இந்துமதத்தையும் இந்தியர்கள் அப்போது இழிவாக கருதினர். அத்தகைய ஒரு சூழ்நிலையில் இந்துக்கள், “நாங்கள் இந்துக்கள்; நாங்கள் இந்தியர்கள்” என்று தலைநிமிரச் செய்தவர் விவேகானந்தர்.தங்களை இழிவாக நினைத்து கேள்விக்குறி போன்று வளைந்திருந்த இந்திய மக்களை, தங்களின் ஆன்மிகச் சிறப்பால் ஆச்சர்யகுறி போன்று தலைநிமிரச் செய்தவர் -விவேகானந்தர்.  

இந்தியா தான் விவேகானந்தரின் கோயிலாக இருந்தது. இந்திய மக்கள் தான் அவர் வணங்கிய தெய்வங்கள். லட்சியம் வேண்டும் 'லட்சியத்துடன் வாழ வேண்டும்' என்பது எல்லோருக்கும் பொதுவானது. தனிமனிதனுக்கும் லட்சியம் என்று ஒன்று இருக்க வேண்டும். ஒரு நாட்டிற்கும் லட்சியம் ஒன்று இருக்க வேண்டும். ஒரு நிறுவனத்திற்கும் லட்சியம் ஒன்று இருக்க வேண்டும். ஓர் இயக்கத்திற்கும் லட்சியம் ஒன்று இருக்க வேண்டும். ஒரு சமுதாயத்திற்கும் லட்சியம் ஒன்று இருக்க வேண்டும்.

லட்சியம் இல்லாத வாழ்க்கை, 'ஏனோதானோ' என்று இருளில் தட்டுத்தடுமாறிச் செல்லும் வாழ்க்கையாக இருக்கும். லட்சியம் இல்லாத வாழ்க்கைப் பயனற்றதாக இருக்கும். விவேகானந்தர் உலகிற்குப் பல அறிவுரைகள் வழங்கியிருக்கிறார். அவற்றில், “எழுந்து கொள்ளுங்கள்! விழித்துக் கொள்ளுங்கள்! லட்சியத்தை அடையும் வரையில் நில்லாமல் செல்லுங்கள்! - ARISE! AWAKE! AND STOP NOT TILL THE GOAL IS REACHED என்ற அறிவுரையைப் பொதுவாக மக்கள் எல்லோரும் அறிந்திருக்கின்றனர்.

இந்த அறிவுரையை அவர் தமிழகத்தில் கும்பகோணத்தில் நிகழ்த்திய சொற்பொழிவில் கூறினார். இளைஞர்களிடம் நம்பிக்கை “உடல் வலிமை, மனவலிமை,ஆன்மிக வலிமை ஆகிய மூன்று வகை வலிமைகளையும் மக்கள் பெற்றிருக்க வேண்டும்,” என்று அழுத்தம் திருத்தமாக கூறியவர் விவேகானந்தர். தமிழக இளைஞர்களிடம் விவேகானந்தர் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தார்.

அந்த நம்பிக்கைக்கு உரியவர்களாக நடந்து கொள்ள வேண்டிய ஒரு தார்மீகக் கடமை, தமிழக இளைஞர்களுக்கு இருக்கிறது.விவேகானந்தர் அரசியலில் மறைமுகமாக கூட ஈடுபட்டதில்லை. அவரது தேச பக்தி கருத்துக்கள் தான், முதன் முதலில் இந்தியாவில் தேசிய எழுச்சியை ஏற்படுத்தியது. எனவே அவர் 'தேச பக்தி ஞானி' என அழைக்கப்பட்டார். அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் தேச பக்தி கருத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

விவேகானந்தரால் இந்தியாவில் முதன் முதலில் வங்காளத்தில் தேசிய எழுச்சி தோன்றியது. பிறகு அது விரைவில் இந்தியா முழுவதும் பரவியது. பின் மகாத்மா காந்திஜி தலைமையில் நல்ல வடிவம் பெற்றது. விவேகானந்தரின் தேச பக்தி கருத்துக்கள், நாட்டில் விடுதலை போராட்டம் தோன்ற அடித்தளம் அமைத்து தந்தன.

இதுகுறித்து பாரதியார், ''விவேகானந்த பரமஹம்ச மூர்த்தியே இந்திய சுதந்திர போராட்டத்திற்கு அஸ்திவாரம் போட்டவர் என்பதை உலகம் அறியும்,'' என்றார். காந்திஜி, ''விவேகானந்தர் எழுதிய நுால்களை முழுவதும் படித்திருக்கிறேன். அவற்றை படித்த பிறகு, என் நாட்டின் மீதிருந்த தேச பக்தி ஆயிரம் மடங்கு அதிகமாயிற்று,'' என்றார். நேதாஜி, ''உண்மையில் இன்றைய இந்தியா விவேகானந்தரால் உருவாக்கப்பட்டது,'' என்றார். நேரு, ''இந்திய விடுதலை போருக்குரிய தேசிய போராட்டத்தை துவங்கிய மாமனிதர்களில் விவேகானந்தரும் ஒருவர்,'' என்றார்.

முழுமை பெற்ற இந்தியா “புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் - இந்தியாவை மறுமலர்ச்சி பெறச் செய்ய வேண்டும் - இந்தியா வல்லரசாக வேண்டும்” என்று நாம் எல்லோரும் நினைக்கிறோம். ஆனால் விவேகானந்தரின் சிந்தனைகளைத் தவிர்த்து விட்டு, புதிய இந்தியாவை உருவாக்குவது என்பது முழுமை பெற்றதாக ஒரு போதும் இருக்கவே இருக்காது- என்ற உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

-சுவாமி கமலாத்மானந்தர்தலைவர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்மதுரை. 0452----268 0224

www.tnpgtakarurdt.blogspot.in