Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, January 12, 2016

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வினா வங்கி தீர்வு புத்தகம் தயார்!

எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வர்களுக்கு, கோபி கல்வி மாவட்ட அலுவலகத்தில், வினா வங்கி தீர்வு புத்தகம் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. 
www.tnpgtakarurdt.blogspot.in
கோபி கல்வி மாவட்டத்தில், நடப்பாண்டு எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வை, 196 பள்ளிகளை சேர்ந்த, 15,004 மாணவர்களும், பிளஸ் 2 தேர்வை, 103 பள்ளிகளை சேர்ந்த, 13,738 பேரும் எழுதுகின்றனர். இவர்களுக்காக பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், வினா வங்கி தீர்வு புத்தகம் குறைந்த விலையில், மாவட்டம் வாரியாக விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஈரோடு மற்றும் கோபி கல்வி மாவட்டத்தை ஒருங்கிணைத்து, ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வினா வங்கி தொகுப்பு புத்தகம் பெறும் மையமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு கணிதம், பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், உயிரியல் புத்தகங்கள் வந்துள்ளன. எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு அறிவியல் பாடத்துக்கு மட்டும் வந்துள்ளது. பிற பாடங்களுக்கு இன்னும் வரவில்லை. 
கரட்டடிபாளையம்-லக்கம்பட்டி ரோட்டில் உள்ள கோபி கல்வி மாவட்ட அலுவலகத்தில், தினமும் காலை, 10 முதல் மாலை, 5 மணி வரை, உரிய தொகை செலுத்தி, வினா வங்கி தீர்வு புத்தகம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
www.tnpgtakarurdt.blogspot.in