Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, January 14, 2016

போதையில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

போதையில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர், நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

வேலுார் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், சின்னுார் கிராம தொடக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியராக வேலை செய்து வந்தவர் சின்னதம்பி, 52. இவர், கடந்த, 9ம் தேதி, மது குடித்து, போதையில் பள்ளிக்கு வந்தார்.மாணவர்களின் பெற்றோர், தலைமை ஆசிரியர் சின்னதம்பிக்கு தர்ம அடி கொடுத்தனர். போலீசார் அவரை மீட்டுச் சென்றனர். ஜோலார்பேட்டை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நடத்திய விசாரணையில், சின்னதம்பி தினமும் குடித்து விட்டு, போதையில் பள்ளிக்கு வந்து கலாட்டா செய்தது தெரிய வந்தது.இதையடுத்து, தலைமை ஆசிரியர் சின்னதம்பியை நேற்று சஸ்பெண்ட் செய்தார்


www.tnpgtakarurdt.blogspot.in