Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, January 09, 2016

பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியல்!

அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான, பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களின் மேற்படிப்பு, பணி அனுபவம் அடிப்படையில், தலைமை ஆசிரியர்களாகவும், நிலை வாரியாகவும், பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி, தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு வழங்க, தொடக்க கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. 
இதுகுறித்து, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு, இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ஜன., 1ம் தேதி நிலவரப்படி, ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து, பிப்., 2க்குள் அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது.
www.tnpgtakarurdt.blogspot.in