Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, January 22, 2016

கால்களில் ஓவியம் வரைந்து அசத்திய மாணவி மாற்றுத்திறனாளிகள் தின போட்டியில் பாராட்டு

கூடலுாரில் நடந்த ஓவியப் போட்டியில், இரண்டு கைகளும் இல்லாத சிறுமி, கால்களில் ஓவியம் வரைந்து அசத்தினார்.

நீலகிரி மாவட்டம், கூடலுாரில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம், ஓவியப்போட்டிகள் நடந்தன.கூடலுார் வண்டிபேட்டை ஊராட்சி பள்ளியில் துவங்கிய ஊர்வலத்தை, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, 22 மாற்றுத் திறனாளிகளுக்கான ஓவியப்போட்டிகள் நடந்தன. இதில், ஜெரோச ஆரம்ப பள்ளியில் முதல் வகுப்பு பயிலும், இரு கைகளும் இல்லாத மாணவி சிட்னாசெரினா தனது கால்களில், நேர்த்தியாக ஓவியம் வரைந்தார். ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில், ஏழாம் வகுப்பு பயிலும் மாணவர் அமரத், வளர்ச்சியில்லாத தனது கைகளில் அசத்தல் ஓவியம் வரைந்தார்.

இவர்கள் இருவரையும், மாவட்ட கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் முருகேசன், முட நீக்கியல் நிபுணர் புனிதா, சிறப்பு ஆசிரியர்கள் ராஜேஷ், நிதியா, நிரோஷா, ஷாலினி ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.
www.tnpgtakarurdt.blogspot.in