Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, January 20, 2016

கருத்துப்படையல்: தடம் மாறிவரும் மாணவர் சமுதாயம், பொறுப்பேற்க வேண்டியது யார்..??


ல்வி ஆர்வலர்களுக்கும்,நம்மில் பலருக்கும் இந்த செய்திகள் பேரதிர்ச்சியை உருவாக்கியிருக்கக்கூடும்...
 நாமக்கல்: மது அருந்தி வகுப்பில் மாணவிகள் வாந்தி!
 கரூர்: போதையில் பேருந்துநிலையத்தில் விழுந்து கிடந்த மாணவன்!
சென்னை: ஒழுங்கீனத்தைக் கண்டித்த ஆசிரியரை ரவுடிகளால் தாக்கிய மாணவனின் அப்பா!
சென்னை: இந்தி ஆசிரியையை கத்தியால் குத்திய மாணவன்!
சென்னை: கணினி ஆசிரியையை ஒங்கி அறைந்து,செவிடாக்கிய மாணவன்!
கோவை: மது அருந்தி நடுரோட்டில் போதையில் தள்ளாடிய மாணவி!
                     

                        இவைகள் நாளிதழ்கள் மூலம் நமக்குத் தெரிந்தவை.
.வெளிச்சத்திற்கு வராமல் போனது இன்னும் எவ்வளவோ..? ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை, சமீப காலமாக மாணவர் சமுதாயம் தனது மாண்பை இழந்து வருகிறது.

         கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் வந்ததிலிருந்தே ஆசிரியர்கள் மாணவர்களை கடிந்து கூட கேள்வி கேட்க முடியாத பேரவலநிலை..! அதிக சுதந்திரதை செல்லப்பிள்ளைகளுக்கு வாரி வழங்கும் பெற்றோர்கள்..! தவறான வழிகளை மையமிட்டுக் காட்டி திசை திருப்பும் ஊடகங்கள்..! இந்த  சூழலில் தடம் மாறிவரும் மாணவர் சமுதாயத்திற்குப் பொறுப்பேற்க வேண்டியது யார்..? என நண்பர்களிடம்  Whats Appல் கேட்டிருந்தோம். அவர்கள் தந்த பதில்கள் இதோ....

  "மாணவர் சமுதாயம் கெடுவதற்கு  இன்றைய மீடியாவும்,டாஸ்மார்க் , இலவச லேப் டாப் போன்ற சமுதாய சீர் கேடுதான் மாணவர்களை தவறான வழிக்கு தூண்டிவிடுகிறது"
  - கோ.இளங்கோ.முகஆ,ஆமேநிப,உப்பிடமங்கலம்,கரூர்.

   “மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட பாதுகாப்பு அவர்களை தவறான விசயங்களுக்கு பயன்படுத்த ஊக்குவிக்கிறது. இதனால் ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு என்பது கேள்வி குறியாகியுள்ளது.மாணவர்களிடம் சகிப்பு தன்மையற்ற போக்கே நிலவுகிறது.ஏன் படிக்கவில்லை? என்ற வினாவை கூட மாணவர்களிடம் கேட்க முடியவல்லை! இந்த மாணவர்களை எப்படி முன்னேற்றுவது? ஆசிரியருக்கு எந்த சுதந்திரமும் தராமல் தேர்வு முடிவு மட்டும் உயர்ந்த நிலையில்வேண்டும் என்பது எவ்விதத்தில் நியாயம்.?
 இது ஒருபுறம் இருக்க ஒரு வகுப்பில் 40: ஒரு ஆசிரியர் என்றால் எங்கள் பள்ளியில்  110: ஒரு ஆசிரியர் எவ்விதத்தில் நியாயம்?
இன்னொரு பக்கம்தட்டிக்கேட்டால் அவர்களை பழிவாங்கும் மீடியாக்கள்!   மாணவர்கள் செய்யும் தவறுகளை அதிக அளவில் விளம்பரம் செய்து மற்ற மாணவர்களை ஊக்குவிக்கிறது இந்த ஊடகம். "ஆசிரியர் பணி அதற்கே உன்னை அர்ப்பணி"என்பது மாறி "ஆசிரியர் பணி அடிமைப் பணி" என்று தான் இப்போதைய நிலமையாக இருக்கிறது 
 
 முன்பெல்லாம் பெற்றோர்கள் தன் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும்போது என்ன வேணும்னாலும் செய்யுங்க ஆனா என் பிள்ளை நன்றாக படித்து பாஸ் பண்ணினால் போதும் என்ற நிலை மாறி மாணவனை திட்டினால் கூட சண்டைக்கு வரும் பெற்றோர்கள் !
கேள்வி கேட்கமுடியாத நிலையில் ஆசிரியர்கள்!
விளம்பரபடுத்தும் மீடியாக்கள்!
போதைப் பொருட்களை விற்கும் சமுதாயம்!
இவர்கள் அனைவரும் தான் பொறுப்பேற்கவேண்டும்!"

  - பிரேமா,மு.க.ஆ.,அரசுநிலைப்பாளையம்,திருச்சிராப்பள்ளி
     
www.tnpgtakarurdt.blogspot.in




"முதல் காரணம் திரையுலகம். ஒரு படத்தில் நல்லது,கெட்டது என இரண்டுமே உண்டு.ஆனால் மாணவர்கள் கெட்டதை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள்.தங்களை ஹீரோக்களாக கற்பனை செய்துகொள்கிறார்கள்.படத்தில் வரும் தீயக்காட்சிகளை மனதில் பதியவைத்துக்கொண்டு வாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறார்கள்.

அடுத்தக்காரணம், அரசாங்கம்,நமது கல்விமுறையும்,அரசியல் சாசனமும் தான். ’கட்டுப்பாடு இல்லாத படகு கரை சேராது’ ஆசிரியர்கள் கையில் மாணவர்களின் கட்டுப்பாடு வரும் வரையில் சமுதாயமும், மாணவனும் மனம் திருந்தி பாதை மாறமாட்டார்கள்.!"

-                 - ரகு,முகஆ,அமேநிப,ஈசநத்தம்,கரூர்


    “தடம் மாறும் மாணவ சமுதாயத்திற்கு அடிப்படைக் காரணம் ஆசிரியர்களே! ஏன் பெற்றோரைச் சொல்லி நாம் தப்பிக்க முடியாதா? கல்வித் துறையை சொல்லி தப்பிக்க முடியாதா? 100% தேர்ச்சியை நோக்கிச்செல்கிறோம், எங்கள் கைகள் கட்டப்பட்டு, கால்கள் வெட்டப் பட்டு, கூண்டுக்குள் அடைக்கப்பட்ட புலியாய் நிற்கிறோம்.இப்படி சொல்லி நம் மனதை தேற்றிக் கொண்டு மாணவர்களை நாம் மறந்து விட்டதாக நான் எண்ணுகிறேன்.இது பிழையாகவும்,அறிவற்ற ஒரு மூடனின் சிந்தனையாகவும் இருக்கலாம்.வயிற்று பிழைப்பிற்கு வழிதெரியாத பெற்றோர் தன் குழந்தைகளின் எதிர் காலத்திற்கு என்ன செய்ய முடியும்? ஏ .சி அறையில் அமர்ந்து, பசியின். வலி தெரியாத அதிகாரிகள் என்ன செய்ய முடியும்? வயது, கல்வி,  அனுபவம், சமுதாய சிந்தை, பெற்றோரைப் போல் அன்பு செலுத்தும் மனம் கொண்ட நாம் நினைத்தால் தகரமாய் இருக்கும் மாணவனை சிகரத்தின் உயரத்திற்கு ஏற்றிடவும் முடியும். நகரத்தின் குழியில் தள்ளிடவும் முடியும்.  ஆக்க சக்தியாய் நாம் இருப்போம்.!”
    - இரா. ஆனந்தன்.முகஆ,அமேநிப,பொய்யுண்டார் கோட்டை,தஞ்சாவூர்.
 
    "Not a single person ... many of them responsible for this..  the govt.. parents... teachers... society... environmental factors..medias.... then... some unnecessary relations.. so how do we judge and solve this problems? But one remedy is there. Love and affection.. i mean healthy interaction between teachers and the students is the must. I am following this method. Compare with other school our students are good."
   - kadalarasi. Commerce PG asst.in GHSS.Valayapatti, Namakkal
  
     "மாணவர்களின் இத்தகைய மாற்றத்துக்கு பொறுப்பேற்க வேண்டியது அரசு 75% மற்றும் மாணவர்களின் குடும்பச்சூழல் 25% ஆகும்.

தனியார் கல்விக்கூடங்களை மறைமுகமாக ஊக்குவிக்கும் பொருட்டு அரசு பள்ளிகளில் கற்பித்தல் பணியினைக் காட்டிலும் பிற நலத்திட்டச் செயல்களுக்கு ஆசிரியர்களின் பணி நேரத்தை பயன்படுத்துவதால் மாணவர்கள் வெறுமனே இருப்பதால் இதுபோன்ற தவறான பழக்கங்களில் ஈடுபடச் செய்கிறது.

தற்போதைய சூழலுக்கு ஒவ்வாத திட்டங்கள், ஆசிரியர்களுக்கு எவ்வித சுயமான முடிவெடுக்க முடியாத சூழலும், அனைவரும் தேர்ச்சி என்ற கொள்கையும் அரசு பள்ளிகளை மக்கள் வெறுத்தோடச் செய்துள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்புவரை அரசுப்பள்ளிகள் மட்டும்தானே இருந்தது, அப்போது இதுபோன்று மாணவர்களின் நடத்தையில் தவறுகள் ஏற்படவில்லையே. மாறாக ஆசிரியர் - மாணவர் உறவுகள் என்பது இனிமையாக இருந்தது.

குடும்பச்சூழலைப் பொறுத்தவரை மாணவர்களுக்கு அதிகமான செல்லம், ஒரு குழந்தை கலாச்சாரம், பணத்தை மட்டுமே சம்பாதிக்க கல்வியைப் பயன்படுத்தும் நிலை. உறவினர்களுடன் தொடர்பில்லாமல் இருத்தல் போன்றவையுமே மாணவர்களின் நெறியற்ற நடத்தைக்கு காரணமாகிறது.

ஆசிரியர்களாகிய நாம் ஏதும் செய்யமுடியாத நிலையில் இருப்பதும் மிக முக்கிய காரணமாகும்."


- மூ.மகேந்திரன்,அஆமேப,வாங்கல், கரூர்.

.

.
www.tnpgtakarurdt.blogspot.in