Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, January 14, 2016

தமிழ் ஆண்டு தோன்றியது எப்படி?

தமிழ் மண்ணில் பல்வேறு பண்டிகைகள் அல்லது விழாக்கள் நடைபெற்று வருகின்ற போதிலும்  பொங்கல் பெருநாளாம் தமிழர் திருநாளே உழைப்பின் சிறப்பை உணர்த்துகின்றது. அறிவியல் அடிப்படையில் திகழ்கின்றது.

இந்நிலையில் மாற்றம் வேண்டி அறிஞர்கள் , சான்றோர்கள் , புலவர் பெருமக்கள் முதலானோர் 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் தலைமையில் கூடினர்.

உலகத் தமிழ்மறை கண்ட ஒப்பற்ற மாமனிதர் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும், அதையே தமிழ் ஆண்டாக ஏற்றுக்கொள்ளவும் கலந்துரையாடல் நடைபெற்றது.

வரலாற்று அடிப்படையிலான ஆய்வுக்குப் பின்னர் திருவள்ளுவர் காலம் கி.மு. 31 என்றும் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் தைத்திங்கள் முதல் நாள் என்றும் முடிவு செய்யப்பட்டது. அம்முடிவைத் தமிழறிஞர் கா.நமச்சிவாயனார் முன்மொழிய, தமிழ்த்தென்றல் தி.ரு.வி.க வழிமொழிய , தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பதினான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் 1935 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 18 ஆம் நாள் திருவள்ளுவர் கழகத்தினர் நடத்திய திருவள்ளுவர் திருநாள் விழாவிற்குத் தலைமை தாங்கிய தமிழ்கடல் மறைமலை அடிகளார் முடிவுரையாக, திருவள்ளுவர் ஆண்டுக்குக் கிறித்தவ ஆண்டுடன் 31ஐக் கூட்ட வேண்டும் என்று திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார்.

நன்றி: கவிஞர்.சண்முகநம்பி, தரகம்பட்டி