'மாணவிகளுக்கு மேக்-அப், பேஷன் எல்லாம் தேவையே இல்லை'' என கர்நாடகா மாநில கவர்னர் வாஜூபாய்வாலா பேசினார்.
பெங்களூருவில் இந்திய அறிவியல் கழக மாநாடு 5 நாட்கள் நடந்தது. நிறைவு நாளில் கவர்னர் பேசியதாவது:கல்லூரிக்கு செல்லும் பெண்கள், பேஷன் ஷோவுக்கு செல்லவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். லிப்ஸ்டிக், ஐபுரோ மேக்-அப் போன்றவை தேவையில்லை.
நீங்கள் கல்லூரிக்கு படிக்கத் தான் வந்திருக்கிறீர்கள். அழகி போட்டியில் கலந்துகொள்ள அல்ல. தலைமுடியை விதவிதமாக மாற்றிக்கொள்ள வேண்டியது இல்லை.அறிவு என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது தான். ஆனால், அழகு விஷயத்தில் ஆண்களை விட பெண்களே ஆர்வமாக இருக்கின்றனர். வாழ்க்கையில் ஒன்றை அடைய வேண்டுமெனில், ஒன்றை இழந்து தான் ஆக வேண்டும்.
மாணவர்களும் தவறான பழக்க வழக்கங்களில் இருந்து வௌி வர வேண்டும். மாணவிகளும் அதே போல், பேஷனில் இருந்து வௌியே வர வேண்டும்.இப்போதெல்லாம் மாணவ, மாணவிகள் 90 முதல் 95 சதவீத மதிப்பெண் எடுக்கின்றனர். நாங்கள் படிக்கும்போது மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து தான் இந்த மதிப்பெண் எடுக்க முடியும். இவ்வாறு பேசினார்.
www.tnpgtakarurdt.blogspot.in