Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, January 28, 2016

பிளஸ் 2 திருப்புதல் தேர்வு துவக்கம்

 திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு நாளை துவங்குகிறது.
மார்ச் மற்றும் ஏப்., மாதத்தில் பொதுத்தேர்வு துவங்குவதால், ஜன., மாதம் முதலே திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகிறது. நடப்பாண்டில், அரையாண்டு தேர்வுகள் தாமதமாக நடந்தால், திருப்புதல் தேர்வு நடத்துவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், முதல் திருப்புதல் தேர்வு, பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை (29ம் தேதி) துவங்கி, பிப்., 26ம் தேதி வரை நடக்கிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, பிப்., 3ம்தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கிறது. மாவட்ட அளவில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு, தேர்வு நடக்கிறது. 
பொதுத் தேர்வு நடைமுறையில், திருப்புதல் தேர்வுகளையும் நடத்த வேண்டுமென தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.www.tnpgtakarurdt.blogspot.in