Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Monday, January 18, 2016

மாணவர்கள் விடைத்தாள் நகல் கேட்டால் ஒரு பக்கத்துக்கு 2 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்க கூடாது: மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

டெல்லி பல்கலைக்கழக மாணவர் அப்னே இங்டி, 5 பாடங்களுக்கான விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தார். அதற்கு, ஒரு பாடத்துக்கு ரூ.750 வீதம் 5 பாடங்களுக்கும் விடைத்தாள் நகல் பெற ரூ.3,750 கட்டணம் செலுத்த வேண்டும் என்று டெல்லி பல்கலைக்கழகம் கூறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்னே, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய தகவல் ஆணையத்தில் புகார் தெரிவித்தார்.
அப்னேவின் மனுவை மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு விசாரித்தார். பின்னர் அவர் கூறியதாவது:
மாணவர் அப்னேவின் மனு தகுதியானதுதான். காரணமே இல்லாமல் அதிக கட்டணம் கேட்பது மாணவர்களுக்கு தகவல் அளிக்க மறுப்பதாகும். மேலும் பணம் இருப் பவர்கள் விடைத்தாள் நகல் பெறவும், பணம் இல்லாத மாண வர்களுக்கு மறுக்கப்படுவதும், அரசியலமைப்பு சட்டம் 14-ன்படி வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை மீறுவதாகும்.
மாணவர்கள் அல்லது குடி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறி பல்கலைக்கழகங்களோ அல்லது மற்ற தேர்வு வாரியங்களோ தங் களுக்கென தனி சட்டத்தை வைத்துக் கொண்டு அதிகாரம் செலுத்தக் கூடாது. தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு நாடாளுமன்றம் வழங்கி உள்ள அதிகாரத்தை டெல்லி பல்கலைக்கழகமோ அல்லது மற்ற கல்வி அமைப்புகளோ மறந்து விடக்கூடாது.
வறுமை, இயலாமை காரண மாக எந்த குடிமகனுக்கும் பார பட்சம் காட்ட கூடாது. டெல்லி பல்கலைக்கழகம் அதிக கட்ட ணத்தை கூறி தகவல்களை அளிக்க மறுப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம். மேலும், ஒரு விடைத் தாள் நகலுக்கு ரூ.750 கட்டணம் கேட்பது, தகவல் அறியும் சட்டத் தின் 3, 6 மற்றும் 7-வது பிரிவை மீறுவதாகும். எனவே, விடைத்தா ளில் ஒரு பக்கத்துக்கு ரூ.2 கட்டணத் துக்கு மேல் வசூலிக்கக் கூடாது.
இவ்வாறு ஸ்ரீதர் ஆச்சார்யலு கூறினார்.
www.tnpgtakarurdt.blogspot.in