வர்த்தக ரீதியில் அதிக எடை கொண்ட பிரிட்டனின் 5 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி-சி28 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக வெள்ளிக்கிழமை இரவு செலுத்தி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புதிய சகாப்தத்தைப் படைத்தது.
ஆந்திரப் பிரதேச மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து இரவு 9.58 மணிக்கு பெரும் சப்தத்துடன் பிஎஸ்எல்வி-சி28 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. 320 டன் எடையும், 44.4 மீட்டர் உயரமும் கொண்ட இந்த ராக்கெட் எக்ùஸல் வகையைச் சேர்ந்தது.
துல்லியமான இயக்கம்: சுமார் 19 நிமிடங்கள் பயணத்துக்குப் பிறகு, மூன்று டிஎம்சி3 செயற்கைக்கோள்களையும் பூமியிலிருந்து 653 கி.மீ. உயரத்தில் அவற்றுக்குரிய சுற்றுப்பாதைகளில் ராக்கெட் ஏவியது. அதன் பிறகு, எஞ்சிய 2 துணை செயற்கைக்கோள்களும் திட்டமிட்ட சுற்றுப்பாதைகளில் ஏவப்பட்டன.
பிஎஸ்எல்வி-சி28 ராக்கெட் சிறப்பாகச் செயல்பட்டு 5 செயற்கைக்கோள்களையும் துல்லியமாகச் செலுத்தியுள்ளது. இதன்மூலம், வணிக ரீதியில் "இஸ்ரோ' செலுத்தியதிலேயே அதிக எடை கொண்ட இந்தத் திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக அதன் தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் தெரிவித்தார்.
ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத் தலைவர் வி.எஸ்.ஹெக்டே, இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் கே.சிவன், தேசிய தொலையுணர்வு மைய இயக்குநர் வி.கே.தத்வால், பிஎஸ்எல்வி-சி28 திட்ட இயக்குநர் பி.ஜெயகுமார், "இஸ்ரோ' முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் இந்த ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்வையிட்டனர்.
29-ஆவது வெற்றி: இந்த வெற்றியின் மூலம் பிஎஸ்எல்வி இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் நம்பகமான ராக்கெட்டாக மாறியுள்ளதாக சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் தலைவர் குன்னி கிருஷ்ணன் கூறினார். ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்படும் ராக்கெட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த வெற்றி பிஎஸ்எல்வியின் 29-ஆவது வெற்றி ஆகும். இதற்கான 62 மணி நேர 30 நிமிட "கவுன்ட் டவுன்' புதன்கிழமை காலை 7.28 மணிக்குத் தொடங்கியது.
பிரிட்டனில் உள்ள சர்ரே செயற்கைக்கோள் தொழில்நுட்ப மையம் (எஸ்எஸ்டிஎல்) பூமியை ஆய்வு செய்வதற்காக மூன்று டிஎம்சி3 செயற்கைக்கோள்களை உருவாக்கியது. இந்த மூன்று செயற்கைக்கோள்களும் தலா 447 கி.கி. எடை கொண்டவை.
இந்தச் செயற்கைக்கோள்கள் பூமியை மிக நுட்பமாகக் கண்காணிப்பதற்காக அனுப்பப்படுகின்றன. இவற்றின் மூலம் பூமியில் எந்த ஓர் இடத்தையும் அனைத்து நாள்களிலும் படம் பிடிக்கலாம்.
பூமியில் உள்ள வளங்களைக் கண்டறியவும், சுற்றுச்சூழல், நகர்ப்புற மேம்பாடு, பேரிடர் மேலாண்மைக்காகவும் இந்தச் செயற்கைக்கோள்கள் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை 7 ஆண்டுகளுக்குச் செயல்படும்.
இந்த மூன்று செயற்கைக்கோள்களுடன் 91 கி.கி. எடை கொண்ட சிபிஎன்டி-1, 7 கி.கி. எடை கொண்ட டி-ஆர்பிட்செய்ல் ஆகிய துணை செயற்கைக்கோள்களும் ஏவப்பட்டுள்ளன. இந்தச் செயற்கைக்கோள்கள் பூமியைக் கண்காணிப்பதற்கான புதிய தொழில்நுட்பத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளன.
இந்தச் செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக அவற்றை எடுத்துச் செல்லும் வட்ட வடிவிலான எல்-அடாப்டரையும், ஒன்றுக்கு மேற்பட்ட செயற்கைக்கோள்களைப் பொருத்தும் முக்கோண வடிவிலான மேடையையும் இஸ்ரோ பிரத்யேகமாக வடிவமைத்திருந்தது.
40 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள்: "இஸ்ரோ' மூலம் இதுவரை 19 நாடுகளைச் சேர்ந்த 40 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. அதில் கடந்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி ஏவப்பட்ட ஸ்பாட்-7 என்ற செயற்கைக்கோள்தான் அதிக எடை (714 கி.கி.) கொண்டது. கடந்த 1999-ஆம் ஆண்டில் ஜெர்மனி நாட்டின் "டிஎல்ஆர்-டியூப்சாட்' என்ற 45 கி.கி. எடை கொண்ட செயற்கைக்கோள்தான் இஸ்ரோ ஏவிய முதல் வெளிநாட்டுச் செயற்கைக்கோள். இப்போது 1,440 கி.கி. எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏவும் அளவுக்கு தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னேறியுள்ளது.
"இஸ்ரோ'வின் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்துக்கும், எஸ்எஸ்டிஎல்லின் டிஎம்சி இன்டர்நேஷனல் இமேஜிங் நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தச் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன.