பிரபல விஞ்ஞானியும், பாரத ரத்னா விருது பெற்றவருமான சி.என்.ஆர்.ராவுக்கு ஜப்பானின் உயரிய விருது வழங்கப்பட்டது.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், "ஆர்டர் ஆஃப் தி ரைசிங் சன்' என்ற விருதை இந்தியாவுக்கான ஜப்பானியத் தூதர் தகேஷி யாகி, சி.என்.ஆர்.ராவுக்கு வழங்கினார்.
விருதைப் பெற்றுக்கொண்ட பிறகு, சி.என்.ஆர்.ராவ் கூறியதாவது:
இந்தியாவும், ஜப்பானும் இணைந்து செயல்படுவதைப் பொருத்தே ஆசியாவின் எதிர்காலம் அமையும். இரண்டு நாடுகளும் பலம் வாய்ந்த நாடுகளாக மாறுவதற்காக, ஒன்றுக்கொன்று உதவிக்கொள்ள வேண்டும்.
இரு நாடுகளிலும் பணிபுரியும் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டும்; தங்களுடைய ஆற்றல்களை உணர வேண்டும். அறிவியல் துறையில், ஜப்பான் ஆற்றிவரும் பங்கு மகத்தானது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு அந்த நாடு அடைந்த வளர்ச்சியைக் கண்டு, சிறு வயது முதலே நான் பிரமித்து வருகிறேன். அத்தகைய நாட்டிடமிருந்து விருது பெறுவதைப் பெருமை
யாகக் கருதுகிறேன் என்றார் சி.என்.ஆர்.ராவ்.