Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, June 02, 2015

‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


தமிழக அரசு சார்பில் வீரதீர செயலுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் - செயலர் ஷம்பு கல்லோலிகர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: ''தமிழக அரசு சார்பில் வீரமான, தைரியமிக்க, எதையும் எதிர்கொள்ளgf கூடிய ஆற்றல்மிக்க ஒரு பெண்மணிக்கு அவரது துறை சார்ந்த பணி அல்லது நடவடிக்கைக்காக ‘கல்பனா சாவ்லா’ விருது வழங்கப்பட்டு வருகிறது. 2015-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், எண் 116-ஏ, ஈவேரா, பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை 600 084’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் 30. விண்ணப்ப உறை மீது ‘2015-ம் ஆண்டு கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பம்’ எனக் குறிப்பிட்டு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.