Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, June 10, 2015

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., விரும்பும் மாணவர்களே உஷார்: 'டான்செட்' மட்டும் போதாது; 'கவுன்சிலிங்' கட்டாயம்


 எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்பில் சேர விரும்புவோர், 'டான்செட்' மட்டுமின்றி, கவுன்சிலிங்கில் பங்கேற்கவும் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும் என, மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.மாநிலம் முழுவதும் உள்ள அரசு இன்ஜி., கல்லுாரிகள், அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லுாரிகளில், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புக்கான, கவுன்சிலிங் பங்கேற்பு விண்ணப்பங்கள், 43 மையங்களில் வழங்கப்பட்டு வருகிறது; வரும், 30ல் நிறைவடைகிறது.கோவை மாவட்டத்தில், அரசு தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் அரசு கலைக் கல்லுாரியில், விண்ணப்பம் வழங்கப்படுகின்றன. பூர்த்திசெய்த விண்ணப்பங்களை வரும், 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.பெறப்படும் விண்ணப்பங்களில், நிராகரிக்கப்பட்டவை போக மீதமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு கவுன்சிலிங்கிற்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. அண்ணா பல்கலையின் கீழுள்ள உறுப்பு கல்லுாரிகள், மண்டல மையங்கள் மற்றும் சில பல்கலைகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பயில விரும்புபவர்களும், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில், வரும் ஜூலை மாதம் நடக்கும் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். இந்நிலையில், டான்செட் தேர்வு மட்டுமின்றி, கவுன்சிலிங்கில் பங்கேற்பதும் கட்டாயம் என்பது தெரியாத மாணவர்கள், இறுதியில், கல்லுாரியில் சேர முடியாது ஏமாற்றமடைகின்றனர்.தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மாணவர் சேர்க்கை செயலர் லட்சுமி பிரபா கூறுகையில், ''டான்செட் தேர்வு தவிர, கவுன்சிலிங் கட்டாயம் என்பது தெரியாமல் மாணவர்கள் பலர் உள்ளனர். இதற்கு விண்ணப்பித்தால் மட்டுமே, கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். டான்செட் மதிப்பெண் மட்டுமே போதுமானது என கருதி, ஆண்டுதோறும் சேர்க்கை கிடைக்காது மாணவர்கள் திரும்பிச் செல்வதும் வழக்கமாக உள்ளது. எனவே, மாணவர்கள் கட்டாயம் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க வேண்டும்,'' என்றார்.