Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, June 04, 2015

பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு | உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு | பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நியமனம், எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுமா இல்லையா என்பது தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


காஞ்சிபுரத்தை சேர்ந்த பி.சதீஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது குறித்து ஏப்ரல் 22-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. எழுத்துத் தேர்வு நடத்தப் பட்டாலும், 

நேர்காணலில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முறையில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. அடிப்படை உரிமையை மீறுவதாகவும் உள்ளது. ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 31-ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அனைத்து நடைமுறைகளுக்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது. உயர்நீதிமன்ற நீதிபதி டி.ஹரி பரந்தாமன் இவ்வழக்கை விசாரித்து, “ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப் படையில் நிரப்பப்பட மாட்டாது என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டார். முழு விவரம்: தமிழக கல்வித் துறையில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் பள்ளிக் கல்வித் துறை மூலம் நேரடியாக நிரப்பப்படுகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. அதில், ஆய்வக உதவியாளர் பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அதில் ஐந்து நபருக்கு ஒருவர் என்ற விகிதத்தின் அடிப்படையிலும், நேர்காணலின்போது பெறுகின்ற மதிப்பெண் அடிப்படையிலும் பணியிடம் நிரப்பப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது. நேர்காணலில் பெறும் மதிப்பெண்ணுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நேர்காணலின்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவு மூப்புக்கு அதிகபட்சம் 10 மதிப்பெண், உயர் கல்வித் தகுதிக்கு 3 மதிப்பெண், பணி அனுபவத்துக்கு 2 மதிப்பெண் அடிப்படையில் தகுதிகாண் மதிப்பெண் வழங்கப்படும். தவிர, நேர்காணலுக்கு 8 மதிப்பெண் எடுக்க வேண்டும் எனவும், தேர்வு நடைமுறை மொத்தம் 25 மதிப்பெண்களுக்கு நடைபெறும் எனவும் குறிப்படப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு முறையில் முரண்பாடுகள் உள்ளன. இது சட்ட உரிமைகளை மீறுவதாக உள்ளது. இந்தத் தேர்வு நடைமுறை அரசு வெளியிட்ட முந்தைய உத்தரவுகளுக்கு எதிராக உள்ளது. ஆய்வக உதவியாளர் பணிக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் 31-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. எனவே, பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான அனைத்து நடைமுறைகளுக்கும் தடை விதிக்க வேண்டும். மேலும், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரினார். இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், மனுதாரர் கூறியபடி எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறாதா என்பது குறித்து பதில் மனுவும் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு ஜூன் 8-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.