Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, June 12, 2015

அரசு மழலையர் பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடநூல்கள் வெளியீடு


புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பயிலும் மழலையர் வகுப்பு (எல்கேஜி, யுகேஜி) மாணவ, மாணவியருக்கு புதிய பாடநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நடப்பாண்டு முதல் இலவசமாக தரப்படும் இந்நூல்கள் புதுச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர் குழுவால் தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதுவை அரசு அச்சகத்திலேயே அச்சடிக்கப்பட்டு நடப்பாண்டு தரப்படுகிறது.
அந்தந்த மழலையர் பள்ளிகளில் எல்கேஜி வகுப்புகளுக்கு இரண்டு பாடப்புத்தகங்கள் அளிக்கப்படும். ஆங்கிலம், கணிதம் மற்றும் சூழ்நிலையியல் ஆகியவை உள்ளடங்கிய தமிழ் வழிப்பாடநூலும், ஆங்கில வழிப்பாடநூலும் அளிக்கப்படும்.
காரைக்காலிலும் இதே போல் புத்தகங்கள் அளிக்கப்பட உள்ளன. குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்களை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.