அண்ணா பல்கலையில், இன்ஜி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நான்கு கட்டமாக நடக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அண்ணா பல்கலை வெளியிட்ட அறிவிப்பு:விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், ஜூன், 28ம் தேதி துவங்குகிறது. மாற்றுத் திறனாளி பிரிவு மாணவர்களுக்கு, ஜூன், 29ல் நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு செவித்திறன் குறைவுற்றோர்; 10:30 மணிக்கு பார்வைத் திறன் குறைவுற்றோருக்கு கவுன்சிலிங் நடக்கிறது.ஜூலை, 1ம் தேதி முதல் பொது கவுன்சிலிங் துவங்குகிறது; ஜூலை, 28ல் முடிகிறது. ஜூலை 29, 30ம் தேதிகளில் தொழிற்கல்வி மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.'கட்-ஆப்' வாரியாக, கவுன்சிலிங் தேதி, அண்ணா பல்கலை இணையதளத்தின், https:/www.annauniv.edu/tnea2015/schedule.php இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.