Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Monday, June 01, 2015

தொழிற்பயிற்சி பெற அழைப்பு



டி.என்.பி.எல்., தொழிற் பயிற்சி நிலையத்தில், நடப்பு கல்வி ஆண்டிற்கான தொழிற்பயிற்சி வகுப்புகள் வரும் ஆகஸ்டு மாதம் முதல் துவக்கப்பட உள்ளது. எலக்ட்ரீசியன், பிட்டர் ஆகிய பிரிவுகளுக்கு இரண்டு ஆண்டு கால பயிற்சியும், வெல்டர் பிரிவிற்கு, ஒராண்டு கால பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. பயிற்சிக்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், டி.என்.பி.எல். தொழிற்பயிற்சி நிலையத்தில், வேலை நாட்களில் காலை, 9 மணி முதல், மாலை, 5 மணி வரை நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஜூன், 10 ம் தேதி மாலை, 5 மணிக்குள் அனுப்பவேண்டும் என, டி.என்.பி.எல்., நிறுவன அறக்கொடை டிரஸ்ட் அறிவித்துள்ளது.