Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, June 04, 2015

”தொலைபேசி உரையாடல் பதிவுகள் வழக்கில் ஆவணமாகுமா?

இரண்டு நபர்கள் தொலைபேசியில் பேசிக்கொள்ளும் பேச்சானது, மூன்றாம் நபரால் பதிவுசெய்யப்பட்டு, நீதிமன்றம் அந்த பதிவை அந்த பேச்சுக்கு ஒரு ஆதாரமாகக் கொள்ள வேண்டுமெனில் அந்தப் பேச்சு எவரால் பேசப்பட்டது ? 
என்ன காரணத்திற்காக நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்பிக்கப்படுகிறது,?
யாரால் அது பதிவு செய்யப்படுகிறது ?எனும் மூன்று அடிப்படைக் கேள்விகள் எழுகிறது.
தொலைபேசி ஒட்டுக்கேட்டல் அல்லது தொலைபேசி பேச்சு பதிவு என்பது ப்ரைவசிக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் எதிரெதிராகவே அமைகிறது.
ஏனெனில், ஒரு பதிவானது பேசுபவரின் ப்ரைவசியை பாதிக்கிறது அதனால் அதைப் பதிவு செய்யலாகாது என ஒரு சாராரும்..
நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் விசயங்களைக் கண்டு பிடிக்கவும், நாட்டின் பாதுகாப்பிற்காகவும் அதைப் பதிவு செய்யலாம் எனவும்..பல்வேறு கருத்துகள்.
ஒரு தொலைபேச்சுப் பதிவு எப்போது நீதி மன்றத்தால் ஏற்கப்படலாம், எப்போது ஏற்கப்படக்கூடாது என்பதை வெவ்வேறு வழக்குகள் சூழல்கள் பிரச்சினைகளின் மூலம் நாம் அறியலாம்.
உதாரணமாக, அது ஒருவரின் தாம்பத்ய வாழ்க்கை பற்றிய அவரது வாழ்க்கைத் துணையால் அளிக்கப்படும் விவாகரத்து போன்ற வழக்காக இருந்தால்
ஒரு அரசியல்வாதி பற்றிய, ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழான பிரச்சனையாக இருந்தால்..
ஒரு நாட்டின் பாதுகாப்புக்காக அந்த அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டால்
இந்தியாவில் ஐகூ அஞிt வந்த பிறகே, இந்திய சாட்சியச் சட்டத்திலும், இந்திய பீனல் கோடிலும்,,இன்னும் சிலபல சட்டங்களிலும், எலக்ட்ரானிகல் பதிவும் ஒரு சாட்சியமாகக் கொள்ளப்படலாம் என சட்டத் திருத்தம் வந்தது.
பழைய தீர்ப்பு அது. The Apex Court in Yuseffalli Esmail Nagree Vs State of Maharashtra, AIR 1968 SC 147 (IPC 165a இந்த சட்டப்பிரிவு ஊழல் ஒழிப்புச் சட்டம் வந்ததும்repeal செய்யப்பட்ட ஒன்று)
இந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவரின் பேச்சானது பதிவு செய்யப்பட்டிருந்தது. அதுவே அந்த லஞ்ச நிகழ்விற்கான சாட்சியாக அரசு தரப்பு முன் வைத்தது. 
இப்படி ஒருவர் பேசுவதைப் பதிவு செய்வது என்பது குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 162 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகில் 20(3) (repeal க்கு எதிரானது என்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் வாதிடப்பட்டது.
அதாவது இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டியது, பொதுவாக ஒருவர் எழுதி கையெழுத்திட்ட ஆவணமானது முதன் நிலை ஆவணமாகவும், அப்படி எழுதிய ஆவணத்தின் ஃபோட்டோ காபி இரண்டாம் நிலையாகவும் கொள்ளப்படுமல்லவா? ஏனெனில், அதைப் பிரதி எடுக்கையில் அதில் வேறேதும் இணைக்கவோ, குறைக்கவோ முடியும் என்பதால் பொதுவாக நாம் அப்படித்தான் பார்க்கிறோம். அதே போல பதிவு செய்யப்பட்ட ஒரு ரெகார்ட் என்பது முதல் நிலையில் ஒருவர் பேசியதை வேறொன்றாக (எலக்ட்ரானிக் வடிவில் மாற்றி) பின் மறுபடி ஒலியலைகளாக மாற்றுவதால் இது முதன் நிலை ஆவணமல்ல எனவும் வாதிடப்பட்டது.
இதை ஆராய்ந்த அபெக்ஸ் கோர்ட் இந்தப் பதிவானது, குற்றவாளியைப் பேசச்சொல்லி வலுக்கட்டாயப்படுத்தி பதிவு செய்யப்பட்டதல்ல எனவே இது அவரது right to silence ண்டிடூஞுணஞிஞு ஐ பாதிக்கவில்லை (இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின்படி Right to Speak என்பது Right to Silence ஐயும் உள்ளடக்கியதே)
எலக்ட்ரானிக் பதிவில், இடையே இடைச்செருகலுக்கும், கழிப்பிற்கும் இடம் உண்டெனினும் அதையும் கவனித்து ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தது.
ஆனால் அதன் பின் Ram singh Vs Col.Ram singh AIR 1986 SC3,எனும் வழக்கில் அதற்கான விதிகளை இயற்றியது.
பதிவு செய்யப்பட்ட குரலானது, குரலுக்குச் சொந்தக்காரரால் ஏற்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் அவரது குரல்தான் என அவரது குரலை அறிந்த ஒருவர் அல்லது பதிவு செய்தவரால் ஐடண்டிஃபை செய்யப்பட வேண்டும்.
அந்தப் பதிவில் இடைச்செருகல் ஏதும் இல்லை என நிரூபிக்கப்படவேண்டும்.
அதில் பேசப்பட்டிருக்கும் விஷயங்கள், இந்திய சாட்சியச் சட்டத்தில் சொல்லப்பட்டபடி, பேசப்படும் பிரச்சினை பற்றியனவாக மட்டுமே இருக்க வேண்டும்.
அந்த ஒலிநாடாவானது, பத்திரமாக சீலிடப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.
பேசுபவரின் பேச்சொலி தெளிவானதாக இருக்க வேண்டும்.
மேற்கண்ட வழக்குகளில், பிரச்சனையானது நாட்டின் இறையாண்மைக்கு ஊறு செய்யும் ஊழல், லஞ்சம் போன்றவை பற்றியதாக இருந்தது. எலக்ட்ரானிக் பதிவும் ஏற்கப்பட்டது.
இதை ஒட்டியே, இன்னொரு வழக்கும்..
Smt. Rayala M.Bhuvaneswari V. Nagaphanender Rayala எனும் வழக்கு
அமெரிக்காவில் வசிக்கும் கணவனும் மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக கணவனால் விவாகரத்து மனு செய்யப்பட்டது.
அதில் ஒரு சான்றாவணமாக, மேற் கூறிய வழக்குகளைப் போல, அந்த மனைவி இந்தியாவில் இருந்த தன் பெற்றோருடனும் நண்பர்களிடமும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய மின்னணும்ப் பதிவு ஒன்றும் கணவனால் முன் வைக்கப்பட்டது. அந்தப் பதிவுகள் மனைவிக்குத் தெரியாமல், அந்தக் கணவனால் பதிவு செய்யப்பட்டவை.
மேற் குறிப்பிட்ட முந்தைய ராம்சிங் வழக்கில் சுட்டப்பட்ட விதிகளைப் பின்பற்ற, அந்தக் குரல் அந்த மனைவியுடையதுதானா எனக்கண்டறிய 
இந்திய சாட்சியச்சட்டத்தின் பிரிவு 45ன்படி(Experts Opinion)—ற்காக நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.
மனைவியின் குரல் நீதிமன்றத்தில் ஒரு முறை பதிவு செய்யப்பட வேண்டும் எனவும், பின் அந்தக் குரல், சான்றாவணமாக முன் வைக்கப்பட்ட பதிவுடன் ஒப்பிடப் பட வேண்டும் எனவும் குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மனைவி ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு செய்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பில் ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்றம், 
கணவனின் இந்தச் செயலானது மனைவியின் Right to Privacyக்கு எதிரானது என்றும்,
கணவன் மனைவியிடையே ஒரு பரஸ்பர நம்பிக்கை இருக்க வேண்டும் அதைத் தகர்க்கும் இது போன்ற ஒரு பதிவை அந்தக் கணவரே முன் வைக்கலாமா? என்றும் கேள்வி எழுப்பியது.
அத்துடன், மனைவியின் குரலானது இங்கே ஒரு ஆவணமாக வைக்கப்படக்கூடாது என்றும் அதன் காரணமாக மனைவியின் குரலை ஒப்பிடத் தேவையே இல்லை எனவும். இது இருவரின் அந்தரங்க உரிமைக்கு எதிரானது என்றும் கூறி நீதி வழங்கியது.
ஆக, ஒரு தனி நபரின் Right to Privacyக்கு எதிராகச் செய்யும் பதிவு ஏற்கப்படவில்லை. நாட்டின் பாதுகாப்புக்கெதிராகச் செய்யப்படும் செயல்களை எதிர்க்க செய்யப்படும் பதிவு இந்திய சட்டத்தில் ஏற்கப்படுகிறது . 
- வழக்கறிஞர் ஹன்ஸா